தேசிய செய்திகள்

டெல்லியில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 648- ஆக குறைந்தது + "||" + Delhi reports 648 new #COVID19 cases (positivity rate 0.99%), 1622 recoveries, and 86 deaths in the last 24 hours

டெல்லியில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 648- ஆக குறைந்தது

டெல்லியில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 648- ஆக குறைந்தது
டெல்லியில் கொரோனா தொற்று பாதிப்பால் கடந்த 24 மணி நேரத்தில் 86-பேர் உயிரிழந்துள்ளனர்.
புதுடெல்லி,

கொரோனா வைரசின் 2-வது அலையில் மிகக்கடுமையான பாதிப்பை டெல்லி எதிர்கொண்டது. ஏப்ரல் மாத இறுதியில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 28 ஆயிரத்தை தாண்டியது. இதனால், டெல்லி மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பியது. கொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டு வர டெல்லி அரசு கடுமையான ஊரடங்கை அமல்படுத்தியது.

 இதன் பலனாக டெல்லியில் மெல்ல மெல்ல கொரோனா வைரஸ் கட்டுக்குள் வரத்தொடங்கியது.  கடந்த சில வாரங்களாக டெல்லியில் ஒருநாள் கொரோனா பாதிப்பு சீராக சரிந்து வருவது மக்களுக்கு சற்று ஆறுதல் அளிக்கும் விஷயமாக இருந்து வருகிறது. தொற்று பாதிப்பு குறைந்தாலும் டெல்லியில் ஜுன் 7 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. எனினும், தொழில் நிறுவனங்கள் செயல்பட தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

இந்த  நிலையில், டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 648- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு விகிதம் 0.99 % ஆக உள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து 1,622- பேர் குணம் அடைந்த நிலையில், 86- பேர் உயிரிழந்துள்ளனர்.  தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 11,040- ஆக குறைந்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. இங்கிலாந்தில் ஊரடங்கு தளர்வை தள்ளிவைக்க திட்டம்?
தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத்தொடங்கியதால் ஊரடங்கு தளர்வை தள்ளிவைக்க இங்கிலாந்து திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
2. கோவாவில் 21- ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு
கோவாவில் வரும் 21 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
3. மே.வங்காளத்தில் மேலும் 4,286- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று
மேற்கு வங்காளத்தில் மேலும் 4,286- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. ஜூன் 12: மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்
தமிழ்நாட்டில் இன்று 15 ஆயிரத்து 105 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. மராட்டியத்தில் இன்று 10 ஆயிரம் பேருக்கு கொரோனா - 14 ஆயிரம் பேர் டிஸ்சார்ஜ்
மராட்டியத்தில் இன்று 10 ஆயிரத்து 910 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.