தேசிய செய்திகள்

புகையிலை ஒழிப்பு நடவடிக்கைக்கான சிறப்பு விருதுக்கு ஹர்ஷ் வர்தன் தேர்வு - உலக சுகாதார நிறுவனம் + "||" + WHO honours Harsh Vardhan on World No Tobacco Day for banning e-cigarettes

புகையிலை ஒழிப்பு நடவடிக்கைக்கான சிறப்பு விருதுக்கு ஹர்ஷ் வர்தன் தேர்வு - உலக சுகாதார நிறுவனம்

புகையிலை ஒழிப்பு நடவடிக்கைக்கான சிறப்பு விருதுக்கு ஹர்ஷ் வர்தன் தேர்வு  - உலக சுகாதார நிறுவனம்
புகையிலை ஒழிப்பு நடவடிக்கைக்கான சிறப்பு விருதுக்கு மத்திய மந்திரி ஹர்ஷ் வர்தன் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,

உலக அளவில் 6 பிராந்தியங்களில் உள்ள தங்கள் கிளைகள் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஒருவருக்குப் புகையிலை கட்டுப்பாடு தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைப் பாராட்டி உலக சுகாதார அமைப்பு விருது வழங்கி கவுரவிக்கிறது.

அந்த வகையில் இந்த ஆண்டு உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி, உலக சுகாதார அமைப்பு இயக்குநரின் சிறப்பு அங்கீகார விருது மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷவர்தனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

2019ஆம் ஆண்டு இந்தியாவில் இ-சிகரெட்டை ஒழிக்கவும், சூடுபடுத்தப்பட்ட புகையிலைப் பொருட்களை ஒழிக்கவும் சட்டம் இயற்றியதற்கு அங்கீகாரம் வழங்கும் விதத்தில் மத்திய மந்திரி ஹர்ஷவர்தனுக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ராஸ் அதானம் கேப்ரியாசிஸ் அறிவித்துள்ளார்.

உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ராஸ் அதானம் கேப்ரியாசிஸ் டுவிட்டரில் பதிவிட்ட கருத்தில், 'இந்திய சுகாதாரத்துறை மந்திரி  ஹர்ஷவர்தன் புகையிலைக் கட்டுப்பாடு தொடர்பாக எடுத்த நடவடிக்கைகளைப் பாராட்டி இந்த ஆண்டு சிறப்பு அங்கீகார விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

2019ஆம் ஆண்டு இ-சிகரெட், சூடுபடுத்தப்பட்ட புகையிலையை ஒழிக்க அவரின் தலைமை எடுத்த நடவடிக்கை பாராட்டுக்குரியது. நன்றி' எனத் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் இன்று சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் ஒவ்வொருவரும் புகையிலை பயன்படுத்த மாட்டோம் என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.