தேசிய செய்திகள்

மே.வங்க தலைமைச்செயலாளர் ஓய்வு, மம்தா பானர்ஜியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டார் + "||" + Bengal Chief Secretary Quits, Named Chief Adviser To Mamata Banerjee

மே.வங்க தலைமைச்செயலாளர் ஓய்வு, மம்தா பானர்ஜியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டார்

மே.வங்க தலைமைச்செயலாளர் ஓய்வு, மம்தா பானர்ஜியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டார்
மேற்கு வங்காளத்தின் தலைமை செயலாளர் பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்ற அலபன் பந்தோபாத்யா, மம்தா அரசின் ஆலோசகராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தின் தலைமைச்செயலாளர் அலபன் பந்தோபாத்யாவை திரும்ப அழைத்து உள்துறை அமைச்சகம் பிறப்பித்த உத்தரவை ஏற்க மறுத்த மம்தா பானர்ஜி, மத்திய அரசின் முடிவு ஒருதலைபட்சமானது எனவும் உடனடியாக இந்த உத்தரவை திரும்ப பெற வேண்டும் என்றும் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். 

இந்தக் கடிதம் எழுதி சில மணி நேரங்களே ஆன நிலையில், தலைமைச்செயலாளர் பொறுப்பில் இருந்து அலபன் பந்தோபாத்யா ஓய்வு பெற்றுவிட்டதாக மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேலும்,  தனது அரசின் தலைமை ஆலோசகராக அடுத்த மூன்று ஆண்டுகளாக அவர் செயல்படுவார் என்றும் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.   மேற்கு வங்காளத்தின் புதிய தலைமைச்செயலாளராக ஹெச். கே திவேதி நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

1. சுவேந்து அதிகாரிக்கு எதிரான மனு: விசாரிக்கும் நீதிபதி பா.ஜ.க உறுப்பினர் ;வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டும் - மம்தா பானர்ஜி
சுவேந்து அதிகாரிக்கு எதிரான வழக்கை விசாரிக்கும் நீதிபதி பா.ஜ.க உறுப்பினர் வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டும் என மம்தா பானர்ஜி கோரிக்கை வைத்து உள்ளார்.
2. சுவேந்து அதிகாரி வெற்றியை எதிர்த்து மம்தா மனு- கொல்கத்தா ஐகோர்ட் இன்று விசாரணை
நந்திகிராம் சட்டப்பேரவைத் தொகுதியில், பா.ஜ.க.,வின் சுவேந்து அதிகாரி வெற்றி பெற்றதை எதிர்த்து, மம்தா பானர்ஜி கொல்கத்தா ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
3. முதல் மந்திரிக்கு கவர்னர் எழுதிய கடிதம் டுவிட்டரில் வெளியிடப்பட்டதற்கு மேற்கு வங்க அரசு விமர்சனம்
முதல் மந்திரி - கவர்னருக்கு இடையேயான தகவல் தொடர்பின் புனிதத்தை சீர்குலைப்பதாக உள்ளது என மேற்கு வங்க உள்துறை தெரிவித்துள்ளது.
4. மேற்கு வங்காளத்தில் இன்று 3,519- பேருக்கு கொரோனா தொற்று
மேற்கு வங்காளத்தில் இன்று 3519- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. மேற்கு வங்காளத்தில் இன்று 3,984 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
மேற்கு வங்காளத்தில் இன்று மேலும் 3,984 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.