தேசிய செய்திகள்

உத்தரகண்ட் மாநிலத்தில் ஜூன் 9 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு + "||" + Uttarakhand Lockdown Extended Till June 9. Check New Guidelines

உத்தரகண்ட் மாநிலத்தில் ஜூன் 9 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு

உத்தரகண்ட் மாநிலத்தில் ஜூன் 9 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு
உத்தரகண்ட் மாநிலத்தில் ஜூன் 9 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
டேராடூன்,

உத்தரகண்ட் மாநிலத்தில் ஜூன் 9 ஆம் தேதி காலை 6 மணி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருப்பதாக மாநில அரசு அறிவித்துள்ளது.

அரசு செய்தித்துறை மந்திரியுமான சுபோத் உனியால் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், 

மளிகைக் கடைகளை வாரத்தில் இரண்டு நாட்கள் அதாவது ஜூன் 1 மற்றும் ஜூன் 7 ஆம் தேதிகளில் திறக்கலாம் என்றும் அன்றைய தினங்களில் காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே கடைகளை திறக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புத்தகம் மற்றும் ஸ்டேஷனரி கடைகள் ஜூன் 1 ஆம் தேதி மட்டும் திறக்கலாம் என சுபோத் உனியால் மந்திரி தெரிவித்தார்.

மேலும், கொரோனாவால் மரணம் அடையும் பத்திரிகையாளர்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்றும், கொரோனாவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றால் அதற்குரிய பணத்தை அரசு வழங்கும் என்றும் உத்தரகண்ட் அரசு அறிவித்துள்ளது.