மாநில செய்திகள்

முதல் கட்ட கொரோனா நிவாரண தொகை பெறாதவர்கள், ஜூன் மாதத்தில் பெறலாம் - தமிழக அரசு + "||" + Government of Tamil Nadu extends opportunity to receive Rs.2000

முதல் கட்ட கொரோனா நிவாரண தொகை பெறாதவர்கள், ஜூன் மாதத்தில் பெறலாம் - தமிழக அரசு

முதல் கட்ட கொரோனா நிவாரண தொகை பெறாதவர்கள், ஜூன் மாதத்தில் பெறலாம் - தமிழக அரசு
முதல் தவணை கொரோனா நிதி ரூ.2,000 பெற தமிழக அரசு அவகாசம் நீட்டிப்பு செய்து உத்தரவிட்டுள்ளது.
சென்னை,

திமுகவின் தேர்தல் அறிக்கையில், ஆட்சிக்கு வந்தால் கொரோனா நிவாரண நிதியாக ரூ. 4,000 வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதும் அதற்கான அரசாணை வெளியிடப்பட்டது.

அதன்படி, மே மாதத்தில் முதல் தவணையாக ரூ. 2,000 வழங்கப்பட்டது. இதனிடையே ஊரடங்கு காரணமாக முதல் தவணை பெறாதவர்கள் , ஜூன் மாதத்திலும் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தியில்,

தமிழ்நாட்டில் தொடர்ந்து அதிகரித்து தற்போது கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ள கொரோனா நோய் பரவலை கருத்தில் கொண்டும் மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் மற்றும் சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம் பரிந்துரைத்துள்ள ஒரு சில கட்டுப்பாடுகளை கருத்தில் கொண்டும் கரோனா நோய் பரவல் சங்கிலியை உடைத்து பரவலை உடனடியாக தடுக்கும் பொருட்டு 07.06.2021 முடிய அதிக தளர்வுகளற்ற முழு ஊரடங்கு ஆணையிடப்பட்டு செயலாக்கத்தில் உள்ளது. இதன் காரணமாக பொது மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டு வாழ்வாதாரங்களும் பாதிப்புக்குள்ளாகும் சூழலை கருத்தில் கொண்டு தற்போது நடைமுறையிலுள்ள அரிசி குடும்ப அட்டைகள் மற்றும் அரிசி குடும்ப அட்டைகள் பெற தகுதியுடையவை என தணிக்கை மூலம் தீர்மானிக்கப்பட்டு குடும்ப அட்டைகள் விநியோகிக்க நடைமுறையில் இருந்த குடும்பங்களையும் சேர்த்து ஆக மொத்தம் 2,09,81,900 குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண உதவித் தொகை முதல் தவணையாக 15.05.2021 முதல் குடும்ப அட்டை ஒன்றுக்கு ரூ. 2000 வீதம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. 31.05.2021 முடிய இவற்றில் 98.4 சதவீதம் குடும்பங்கள் நிவாரண உதவித் தொகை பெற்று சென்றுள்ளனர்.

மீதமுள்ள குடும்பங்களில் நோய் தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட நிலையிலும், முழு ஊரடங்கு காரணமாக சொயத ஊருக்கு சென்ற காரணத்தினாலும் முகவரி மாற்றம் செய்து போக்குவரத்து வசதியின்மை காரணமாக நியாயவிலைக் கடைக்கு செல்ல இயலாத நிலையிலும் சில குடும்பங்கள் நிவாரண உதவித் தொகைபெற இயலவில்லை என அரசின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட குடும்பங்கள் அவர்களுக்கான நிவாரண உதவித் தொகை பெறும் வகையில் அத்தொகையினை ஜுன் 2021 மாதத்தில் சம்பந்தப்பட்ட நியாய விலைக் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது.

அட்டைதாரர்கள் உரிய கரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றியும் முகக்கவசம் மற்றும் சமுக இடைவெளியினை பின்பற்றியும் தங்களையும் சமூகத்தையும் நோய்தொற்று அபாயத்திலிருயது காத்துக் கொள்ளவும் நோய் தொற்று சங்கிலியினை உடைத்திடவும் உதவும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.