மாநில செய்திகள்

ஆம்போடெரிசின் மருந்தை தமிழகத்திற்கு அதிகப்படுத்தி வழங்குக: பிரதமர் மோடிக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம் + "||" + Edappadi Palanisamy's letter to Prime Minister Modi

ஆம்போடெரிசின் மருந்தை தமிழகத்திற்கு அதிகப்படுத்தி வழங்குக: பிரதமர் மோடிக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்

ஆம்போடெரிசின் மருந்தை தமிழகத்திற்கு அதிகப்படுத்தி வழங்குக: பிரதமர் மோடிக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்
கருப்பு பூஞ்சை நோய்க்கான ஆம்போடெரிசின் மருந்தை தமிழகத்திற்கு அதிகப்படுத்தி தர வேண்டும் என பிரதமர் மோடிக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதி உள்ளார்.
சென்னை,

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பிரதமருக்கு எழுதி உள்ள கடிதத்தில்,

'தமிழகத்திற்குத் தேவைப்படும் தடுப்பூசிகள், ஆக்சிஜன், ரெம்டெசிவிர் மருந்துகளை அதிகரித்து வழங்க உடனடியாக பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் கருப்புப் பூஞ்சை நோய் (mucormycosis) வேகமாகப் பரவி வருவதை தங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்.

இதற்கான ஆம்போடெரிசின்-பி மருந்து (Liposomal amphotericin B14) மருந்து தட்டுப்பாடும் தமிழகத்தில் அதிகம் உள்ளது. தயவுசெய்து கருப்புப் பூஞ்சை நோய்க்கான மருந்து ஆம்போடெரிசின்-பி மருந்து சப்ளையை அதிகரித்து பாதிக்கப்பட்டவர்கள் உயிரைக் காக்க உதவ வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.