மாநில செய்திகள்

ஊரடங்கால் குழந்தை திருமணம் அதிகரிப்பு - அமைச்சர் கீதா ஜீவன் எச்சரிக்கை + "||" + Increase in curfew child marriage - Minister warns

ஊரடங்கால் குழந்தை திருமணம் அதிகரிப்பு - அமைச்சர் கீதா ஜீவன் எச்சரிக்கை

ஊரடங்கால் குழந்தை திருமணம் அதிகரிப்பு - அமைச்சர் கீதா ஜீவன் எச்சரிக்கை
தமிழகத்தில் ஊரடங்கு காலத்தில் குழந்தை திருமணங்கள் அதிகரித்துள்ளதாக கூறப்படும் நிலையில் அமைச்சர் கீதா ஜீவன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை,

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் ஜூன் 7-ம் தேதி வரை முழு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊரடங்கை காரணமாக கொண்டு 18 வயதிற்குட்பட்ட சிறுவர், சிறுமியருக்கு சட்டத்திற்கு புறம்பாக குழந்தை திருமணம் நடத்தப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து இன்று தமிழக பெண்கள் மற்றும் குழந்தைகள் நலவாழ்வு துறை அமைச்சர் கீதா ஜீவன் தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். பின்னர் இதுகுறித்து தெரிவித்த அவர்,

2020-ம் ஆண்டு மே மாதத்தில் மட்டும் 40% குழந்தை திருமணங்கள் அதிகரித்துள்ளது. ஊரடங்கால் மாணவிகள் வீட்டிலேயே முடங்கி உள்ளதை பயன்படுத்தி கட்டாய திருமணம் செய்து வைக்கப்படுகிறது.

சேலம், தருமபுரி,ராமநாதபுரம், திண்டுக்கல்,மாவட்டங்களில் உள்ள 72 பழங்குடி கிராமங்களில் பரவலாக குழந்தை நடைபெற்று உள்ளதாக கூறப்படுகிறது.

'குழந்தை திருமணங்கள் நடத்துவது சட்டப்படி பெரும் குற்றம். குழந்தை திருமணத்தை நடத்துபவர்கள், அதை ஊக்குவிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்' என்று எச்சரித்துள்ளார்.