தேசிய செய்திகள்

கொரோனா தடுப்பூசி விவகாரம்: 11 மாநில முதல்வர்களுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் + "||" + Pinarayi Vijayan Urges 11 Non-BJP Chief Ministers To Press Centre For Free Covid Jabs

கொரோனா தடுப்பூசி விவகாரம்: 11 மாநில முதல்வர்களுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம்

கொரோனா தடுப்பூசி விவகாரம்: 11 மாநில முதல்வர்களுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம்
தடுப்பூசியை, மத்திய அரசு இலவசமாக விநியோகிக்க வேண்டும் என்ற கோரிக்கையை மாநிலங்கள் கூட்டாக முன் வைக்க வேண்டும் என பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரம், 

பாஜக அல்லாத 11 மாநில முதல்வர்களுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், கொரோனா தடுப்பூசி பிரச்சினையை தீர்க்க  மாநிலங்கள் ஒன்றாக நிற்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள பினராயி விஜயன், தடுப்பூசியை, மத்திய அரசு இலவசமாக விநியோகிக்க வேண்டும் என்ற கோரிக்கையை மாநிலங்கள் கூட்டாக முன் வைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.  

மேலும், தடுப்பூசி கொள்முதல் சுமை முழுவதுமாக அல்லது கணிசமாக மாநிலங்களின் மீது கூட விழுந்தால், அவர்களின் நிதி நிலைமை கடுமையான நெருக்கடியில் இருக்கும். மாநிலங்களின் நிதி வலிமை என்பது  ஒரு ஆரோக்கியமான கூட்டாட்சி அமைப்புக்கு  இன்றியமையாத அங்கமாகும்.

 மாநிலங்களின் நிதியில் சிக்கல் ஏற்பட்டால் கூட்டாட்சியும் பலவீனம் அடையும்.  நம்மை போன்ற ஜனநாயக அரசியலுக்கு இது உகந்ததாக இருக்காது. மந்தை நோய் எதிர்ப்பு சக்தியை விரைவாக உருவாக்குவதற்கான முயற்சிகளுக்கு இது  தடையாகவும்  இருக்கும்” என தனது கடிதத்தில் பினராயி விஜயன் வலியுறுத்தியுள்ளார். 


தொடர்புடைய செய்திகள்

1. கோவின் தளம் ஹேக் செய்யப்பட்டு தகவல்கள் கசியவிடப்பட்டதாக வெளியான தகவல் தவறானது - மத்திய அரசு மறுப்பு
கோவின் தளம் ஹேக் செய்யப்பட்டு தகவல்கள் கசியவிடப்பட்டதாக வெளியான தகவல் முற்றிலும் தவறானது என மத்திய சுகாதாரத்துறை மறுப்பு தெர்வித்து உள்ளது.
2. கொரோனா தடுப்பூசிக்கு காப்புரிமை விலக்கு அளிக்க உலக வர்த்தக அமைப்பில் இந்தியா எடுத்த முயற்சியில் முன்னேற்றம்
கொரோனா தடுப்பூசிக்கு காப்புரிமை விலக்கு அளிப்பதற்கு உலக வர்த்தக அமைப்பில் இந்தியா எடுத்து முயற்சியில் முன்னேற்றம் காணப்பட்டுள்ளது.
3. தனியார் மருத்துவமனைகளில் விலை நிர்ணயம் ; மாநில அரசுகளுக்கு 74 கோடி தடுப்பூசிகள் மத்திய அரசு ஆர்டர்
மாநில அரசுகளுக்கு விநியோகிக்க மேலும் 74 கோடி தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு ஆர்டர் கொடுத்துள்ளது. தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசிகளின் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
4. கொரோனா பாதிப்புகளுக்கேற்ப மாநிலங்களுக்கு கொரோனா தடுப்பூசி - மத்திய அரசு வழிகாட்டு நெறிமுறை
கொரோனா பாதிப்புகளுக்கேற்ப மாநிலங்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
5. ஏழை நாடுகளுக்கு வளர்ந்த நாடுகள் தடுப்பூசிகள் வழங்கி உதவ வேண்டும்-உலக சுகாதார அமைப்பு
ஏழை நாடுகளுக்கு வளர்ந்த நாடுகள் தடுப்பூசிகளை வழங்கி உதவ வேண்டும் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.