மாநில செய்திகள்

தொடர்ந்து குறையும் தினசரி பாதிப்பு: தமிழகத்தில் மேலும் 27,936 பேருக்கு கொரோனா; 478 பேர் உயிரிழப்பு + "||" + Tamilnadu records 27,936 new COVID19 cases

தொடர்ந்து குறையும் தினசரி பாதிப்பு: தமிழகத்தில் மேலும் 27,936 பேருக்கு கொரோனா; 478 பேர் உயிரிழப்பு

தொடர்ந்து குறையும் தினசரி பாதிப்பு: தமிழகத்தில் மேலும் 27,936 பேருக்கு கொரோனா; 478 பேர் உயிரிழப்பு
தமிழகத்தில் நேற்று 28,864 பேருக்கு தொற்று ஏற்பட்ட நிலையில் இன்று 27,936 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை,

தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து குறைந்து வருகிறது. அந்தவகையில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் 1,63,672 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் வெளிமாநிலத்தில் இருந்து வந்த 2 பேர் என 27,936 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மேலும் 2,569 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

கொரோனாவால் மேலும் 478 பேர் இறந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 24,232 ஆக உயர்ந்துள்ளது.

அரசு மருத்துவமனைகளில் 258 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 220 பேரும் உயிரிழந்தனர். தமிழகத்தில் கொரோனா 2-வது அலையால் மே மாதம் மட்டும் 10,039 பேர் உயிரிழந்தனர்.

கொரோனாவில் இருந்து மேலும் 31,223 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 17,70,503 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 3,01,781 ஆக உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.