உலக செய்திகள்

சீனாவில் புதிதாக 20 பேருக்கு கொரோனா: நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம் + "||" + China reports 20 new COVID-19 cases as authorities rush to contain mini-outbreak in Guangdong

சீனாவில் புதிதாக 20 பேருக்கு கொரோனா: நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்

சீனாவில் புதிதாக 20 பேருக்கு கொரோனா: நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்
சீனாவின் தென்கிழக்கு பகுதியில் உள்ள குவாங்டாங் மாகாணத்தில் புதிதாக 20 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது.
பெய்ஜிங், 

கொரோனா வைரஸ் தொற்று முதன் முதலாக கண்டறியப்பட்ட நாடான சீனா,  தொற்று பரவலை மிகசிறப்பாக கையாண்டு பாதிப்பு எண்ணிக்கை கட்டுப்படுத்தியுள்ளது. 2019- டிசம்பரில் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்ட சீனாவில் இதுவரை மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்தைக் கூட எட்டவில்லை. அந்த அளவுக்கு விழிப்புடன் பணியாற்றி தொற்று பரவலை சீனா கட்டுக்குள் வைத்துள்ளது. 

இந்த நிலையில், சீனாவின் தென்கிழக்கு பகுதியில் உள்ள குவாங்டாங் மாகாணத்தில் புதிதாக 20 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. இதையடுத்து, உடனடியாக  கொரோனா பாதித்த பகுதிகளில் மினி கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ள சீனா, நோய்தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. குவாங்டாங் மாகாணத்தில் இருந்து வெளியே செல்ல பயணக்கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனாவால் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு ரூ. 4 லட்சம் வழங்க முடியாது: மத்திய அரசு
கொரோனாவுக்கு உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு ரூ. 4 லட்சம் கொடுக்க முடியாது என சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
2. திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா வைரசுக்கு ஒரே நாளில் 220 பேர் பாதிப்பு
திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக கொரோனா வைரஸ் இரண்டாவது அலையின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது.
3. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 60,753- பேருக்கு கொரோனா
இந்தியாவில் தொடர்ந்து 37-வது நாளாக தொற்று பாதிப்பவர்கள் எண்ணிக்கையை விட குணம் அடைவோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
4. பிரேசிலில் மீண்டும் வேகமாக அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு
உலக அளவில் தினசரி கொரோனா பாதிப்பில் பிரேசில் கடந்த சில நாட்களாக முதலிடம் வகிக்கிறது.
5. இந்தியாவில் மேலும் 62,480- பேருக்கு கொரோனா
இந்தியாவில் 73 நாட்களுக்குப் பிறகு சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்திற்கும் கீழ் வந்தது