மாநில செய்திகள்

சட்டசபை கூடும்போது ‘நீட்’ தேர்வு குறித்த அறிவிப்பு வரும் - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி + "||" + The announcement of the 'NEET' selection will come when the assembly convenes - Minister Anbil Mahesh Poyamozhi

சட்டசபை கூடும்போது ‘நீட்’ தேர்வு குறித்த அறிவிப்பு வரும் - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

சட்டசபை கூடும்போது ‘நீட்’ தேர்வு குறித்த அறிவிப்பு வரும் - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
சட்டசபை கூடும்போது ‘நீட்’ தேர்வு குறித்த அறிவிப்பு வரும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
பட்டுக்கோட்டை, 

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களிடம் கூறியதாவது:-

ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும் தலா ஒரு ஆக்சிஜன் செறிவூட்டும் கருவி இருக்க வேண்டும் என கலெக்டரிடம் தெரிவித்திருக்கிறோம். பொதுமக்களிடையே தடுப்பூசி போடுவதில் தற்போது விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களுக்கு அந்தந்த பகுதியிலேயே சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கொரோனா தொற்று பரவல் குறைந்து வருகிறது. இன்றைக்கு தனியார் பள்ளி ஆசிரியர்களின் நிலை வருத்தத்துக்குரியது. கிட்டத்தட்ட 5 லட்சத்திற்கும் மேற்பட்ட தனியார் பள்ளி ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். தற்போது இதற்கெல்லாம் உடனடியாக தீர்வு காண வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து முதல்-அமைச்சரிடம் எடுத்துக்கூறி எப்படி தீர்வு காணலாம்? என்று முடிவு செய்யப்படும்.

‘நீட்’ தேர்வு குறித்து தேர்தல் பிரசாரத்திலே மையக்கருத்தாக வைத்தோம். முதல்-அமைச்சரும் ‘நீட்’ தேர்வை எந்த காலத்திலும் தமிழ் நாட்டிற்குள் நுழைய விடமாட்டோம் என்று சொல்லி இருக்கிறார். தமிழக சட்டசபை கூடும்போது அது தொடர்பான அறிவிப்பு வரும்” என்று அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. அடுத்த 3 நாட்களில் 56 லட்சம் கொரோனா தடுப்பூசிகள்; மத்திய அரசு அறிவிப்பு
அடுத்த 3 நாட்களில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு 56 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட உள்ளன.
2. கேரளாவில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள்: முதல் மந்திரி அறிவிப்பு
கேரளாவில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை முதல் மந்திரி பினராயி விஜயன் அறிவித்து உள்ளார்.
3. மருத்துவ மாணவர் சேர்க்கை விவகாரம் நீட் தேர்வு தாக்கம் குறித்து ஆராய நீதிபதி தலைமையில் 9 பேர் குழு அமைப்பு மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் 9 பேர் கொண்ட உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
4. 14-ந்தேதி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு அனுமதி இல்லை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு
சென்னையில் வருகிற 14-ந்தேதி நடக்கும் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு அனுமதி இல்லை என்று எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் தெரிவித்துள்ளனர்.
5. செமஸ்டர் தேர்வு 21-ந் தேதி தொடங்கும் சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு
செமஸ்டர் தேர்வு 21-ந் தேதி தொடங்கும் சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு.