தேசிய செய்திகள்

சத்தீஸ்கரில் பெண் நக்சலைட் என்கவுண்ட்டரில் பலி + "||" + Chhattisgarh: Woman Naxal killed in encounter in Dantwewada

சத்தீஸ்கரில் பெண் நக்சலைட் என்கவுண்ட்டரில் பலி

சத்தீஸ்கரில் பெண் நக்சலைட் என்கவுண்ட்டரில் பலி
சத்தீஸ்கரில் நடந்த என்கவுண்ட்டரில் பெண் நக்சலைட் ஒருவர் பலியானார்.
தந்தேவடா, 

சத்தீஸ்கர் மாநிலம் தந்தேவடா மாவட்டத்தில், பாதுகாப்பு படையினரின் என்கவுண்ட்டரில், பெண் நக்சலைட் ஒருவர் கொல்லப்பட்டார். குமால்நர் கிரேமம் அருகே காலை 6.30 மணிக்கு நக்சலைட் ஒடுக்கும் படைப்பிரிவான மாவட்ட ரிசர்வ் போலீசாருக்கும், நக்சலைட்டுகளுக்கும் இடையே திடீர் துப்பாக்கி சண்டை நடந்தது.

நீண்ட நேர சண்டையில் நக்சலைட்டுகள் தப்பி ஓடினர். இறுதியில் ஒரு பெண் நக்சலைட் சடலமாக கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவரது உடலை கைப்பற்றியபோது அது ரூ.2 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டு தேடப்பட்ட பெண் நக்சலைட்டான வைகோ பெக்கோ (வயது24) என்பவரது உடல் என்று தெரியவந்தது. அவர், மக்கள் விடுதலை கொரில்லா ராணுவம் என்ற மாவோயிஸ்ட் கூட்டமைப்பில் செயல்பட்டவர் ஆவார். சம்பவ இடத்தில் 2 கிலோவுக்கு மேற்பட்ட வெடிபொருட்களும் கைப்பற்றப்பட்டன.

தொடர்புடைய செய்திகள்

1. சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 12,239 பேருக்கு கொரோனா
சத்தீஸ்கர் மாநிலத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,42,356 ஆக அதிகரித்துள்ளது.
2. சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 13,628 பேருக்கு கொரோனா
சத்தீஸ்கர் மாநிலத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,30,117 ஆக அதிகரித்துள்ளது.
3. சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 13,846 பேருக்கு கொரோனா
சத்தீஸ்கர் மாநிலத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,16,489 ஆக அதிகரித்துள்ளது.
4. சத்தீஸ்கர்: போதைக்காக ஹோமியோபதி மருந்து குடித்த 8 பேர் பலி
சத்தீஸ்கர் மாநிலத்தில் போதைக்காக ஹோமியோபதி மருந்து குடித்த 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
5. சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 15,157 பேருக்கு கொரோனா
சத்தீஸ்கர் மாநிலத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,02,643 ஆக அதிகரித்துள்ளது.