மாநில செய்திகள்

ஜி.எஸ்.டி. குழு விதிமுறைகளை மற்ற மாநிலங்கள் போல தமிழகமும் ஏற்க வேண்டும்: பா.ஜனதா அறிக்கை + "||" + Tamil Nadu should follow GST committee rules like other states: BJP statement

ஜி.எஸ்.டி. குழு விதிமுறைகளை மற்ற மாநிலங்கள் போல தமிழகமும் ஏற்க வேண்டும்: பா.ஜனதா அறிக்கை

ஜி.எஸ்.டி. குழு விதிமுறைகளை மற்ற மாநிலங்கள் போல தமிழகமும் ஏற்க வேண்டும்: பா.ஜனதா அறிக்கை
ஜி.எஸ்.டி. குழு விதிமுறைகளை மற்ற மாநிலங்கள் போல தமிழகமும் ஏற்க வேண்டும் என்று பா.ஜனதா, தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சென்னை,

தமிழக பா.ஜனதா செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கொரோனா மீட்பு பொருட்களுக்கான வரிவிலக்கு மற்றும் சலுகைகளுக்கான ஜி.எஸ்.டி. குழுவில் தமிழகம் இடம்பெறாதது குறித்து சிலர் விமர்சிப்பது வியப்பாக இருக்கிறது. இந்த குழுக்களுக்கு என விதிமுறை உண்டு. ஒவ்வொரு குழுக்களிலும் அனைத்து மாநிலங்களும் இடம்பெற முடியாது.

இந்த குழுவில் மேகாலயா, குஜராத், மராட்டியம், கோவா, கேரளா, தெலுங்கானா, ஒடிசா, உத்தரபிரதேசம் ஆகிய 8 மாநிலங்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. இந்தநிலையில் தாங்களும் இடம்பெற வேண்டுமென மற்ற மாநிலங்கள் அடம்பிடிக்க முடியுமா?

கடந்த 24-ந்தேதி சூதாட்ட விடுதிகள், ஆன்-லைன் விளையாட்டுகள், குதிரை பந்தயங்கள் குறித்த குழுவில் தமிழகம் இடம்பெற்றுள்ளது. தமிழக பிரதிநிதியாக நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் இடம்பெற்றுள்ளார். 7 மாநிலங்கள் நியமிக்கப்பட்ட குழுவில் மற்ற மாநிலங்கள் ஏன் நியமிக்கப்படவில்லை என்று அவர் கேட்டாரா? தமிழகம் இடம்பெற முடியாது என்று மறுத்தாரா? ஐ.ஜி.எஸ்.டி. குழுவில் கூட தமிழகம் உள்ளது.

அனைத்து மாநிலங்களும் ஏற்றுக்கொண்ட விதிமுறைகளை ஏற்று ஒத்துழைப்பு அளிப்பதே மாநில நலனுக்கும், நாட்டு நலனுக்கும் சிறப்பளிக்கும். அதைவிடுத்து தன் மாநிலத்தை சேர்க்கவில்லை என்று மலிவு அரசியல் செய்வது சிறுபிள்ளைத்தனமே” என்று அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. 40 நாட்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு குறைந்த மாவட்டங்களில் அரசு பஸ்களை இயக்க நடவடிக்கை
தமிழ்நாட்டில் ஜூன் 21ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவடையும் நிலையில் என்னென்ன தளர்வுகள் வழங்குவது என்பது குறித்து முதல்-அமைச்சர் தலைமையில் நாளை ஆலோசனை நடைபெறுகிறது.
2. ஜூன் 10: தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு முழு நிலவரம்
தமிழகத்தில் மாவட்டம் வாரியாக இன்றைய கொரோனா பாதிப்பு முழு விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
3. மேலும் தளர்வுகள் வழங்கப்படுமா...? முதல்-அமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை தொடங்கியது
கூடுதல் தளர்வுகள் வழங்கப்படுவது தொடர்பாகவும் தமிழக அரசின் உயர் அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
4. ஜூன் 09: தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு முழு நிலவரம்
தமிழகத்தில் மாவட்டம் வாரியாக இன்றைய கொரோனா பாதிப்பு முழு விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
5. 34 மாவட்டங்களில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு- பல்லாயிரக்கணக்கானோர் ஏமாற்றம்
மத்திய அரசிடம் இருந்து தடுப்பூசிகள் வந்தால் மட்டுமே இந்த மாவட்டங்களில் இனி தடுப்பூசி போட முடியும் என்கிற நிலை ஏற்பட்டுள்ளது.