தேசிய செய்திகள்

கொரோனாவை குணப்படுத்தும் கத்தரிக்காய் லேகியத்துக்கு ஆந்திர அரசு அனுமதி + "||" + ANDHRA PRADESH: GOVT GIVES NOD TO DISTRIBUTE BONIGI ANANDAIAH'S HERBAL COVID MEDICINE

கொரோனாவை குணப்படுத்தும் கத்தரிக்காய் லேகியத்துக்கு ஆந்திர அரசு அனுமதி

கொரோனாவை குணப்படுத்தும் கத்தரிக்காய் லேகியத்துக்கு ஆந்திர அரசு அனுமதி
கொரோனாவை குண்ப்படுத்தும் கத்தரிக்காய் லேகியத்துக்கு அனுமதி அளித்துள்ளது ஆனால் கத்தரிக்காய் கண் சொட்டு மருந்துக்கு தடைவிதித்து உள்ளது.
நெல்லூர், 

ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம், கிருஷ்ணப்பட்டிணம் முத்துக்கூறு கிராமத்தை சேர்ந்தவர் போனஜி ஆனந்தய்யா என்பவர் பல ஆண்டுகளாக பொதுமக்களுக்கு ஆயுர்வேத மருந்துகளை வழங்கி, வைத்தியம் பார்த்து வருகிறார். சமீபத்தில் இவர் கொரோனா நோயாளிகளுக்காக மருந்து தயாரித்தார். இது நல்ல பலன் தந்ததால் அவரிடம் மருந்து வாங்க பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் கிருஷ்ணப்பட்டிணத்தில் குவிய தொடங்கினர்.

இது கண்ணில் போடக்கூடிய சொட்டு மருந்தாகும். இந்த சொட்டு மருந்து தேன், வால் மிளகுடன், ஒரு குறிப்பிட்ட வகையான கத்தரிக்காயின் கூழ் ஆகியவற்றால் தயாரிக்கப்பட்டு உள்ளது. நெல்லூரில் தற்போது ஆனந்தய்யா தயாரித்த மருந்துகள் பாக்கெட் ஒன்றுக்கு ரூ.1,500 முதல் ரூ.2 ஆயிரம் வரை கள்ளச்சந்தையில் விற்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து தகவலறிந்த ஆந்திர முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி, ஆனந்தய்யாவின் ஆயுர்வேத மருந்து உண்மையில் கொரோனா தொற்றை குணப்படுத்துகிறதா என்பதை ஆய்வு செய்யுமாறு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்.) குழுவை கேட்டுக்கொண்டார். ஆய்வு முடிவு வரும் வரை ஆனந்தய்யாவின் மருந்து விற்பனையை நிறுத்துமாறும் அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

இந்நிலையில், ஆந்திர அரசு நியமனம் செய்த மருத்துவ குழு ஆயுர்வேத மருந்தை ஆய்வு செய்தது. இந்த மருந்தால் எவ்வித பக்க விளைவுகளும் இல்லை என்றும், இவை முற்றிலும் முறையான மூலிகைகளை கொண்டு தயாரிக்கப்படுவதாகவும் அந்த குழு அறிவித்தது.

எனினும் உரிய பரிசோதனைக்கு பிறகு மக்களுக்கு விநியோகிக்கப்படும் என ஆந்திர அரசு அறிவித்தது. இதன்பேரில் திருப்பதி ஆயுர்வேத பல்கலைக்கழகத்தில் அந்த மருந்து பரிசோதிக்கப்பட்டு வருகிறது.

 ஆயுஷ் அமைச்சகம், ஐசிஎம்ஆர் மற்றும் திருப்பதி தேவஸ்தான ஆயுர்வேத நிபுணர்கள் நடத்திய ஆய்வில் ஆனந்தய்யா என்பவர் தயாரித்து வழங்கும் மருந்தில் எந்தவித பக்கவிளைவுகளும் இல்லையென்று நிரூபணமாகி இருப்பதால் அந்த மருந்துக்கு ஆந்திர அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதில் லேகியத்துக்கு மட்டுமே அனுமதி என்றும், கண்ணில் விடப்படும் சொட்டுமருந்துக்கு அனுமதி இல்லையென்றும் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. வெளிநாடு செல்லும் பயணிகள் கோவிஷீல்டு தடுப்பூசியின் 2-வது டோசை 28 நாட்களுக்கு போட்டு கொள்ளலாம்
வெளிநாடு செல்லும் குறிப்பிட்ட பயணிகளுக்கு மட்டும் கோவிஷீல்டு தடுப்பூசியின் இரண்டாவது டோசை 28 நாட்களுக்கு பிறகு போடலாம் என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
2. கொரோனா தடுப்பூசி பக்க விளைவுகளால் இந்தியாவில் முதல் மரணம்..!
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் பக்க விளைவுகளால் ஏற்படும் முதல் மரணத்தை இந்தியா உறுதி செய்து உள்ளது
3. இன்று வரை வயது வாரியாக தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் விவரம்
நாட்டில் 45 முதல் 60 வயதுக்குட்பட்டவர்களுக்கு அதிகபட்சமாக 40 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
4. 14 வகை மளிகை பொருட்கள், 2வது தவணை ரூ. 2,000; ரேஷனில் வினியோகம் தொடங்கியது
நிவாரண உதவி மற்றும் மளிகைப் பொருட்களை இன்று முதல் இந்த மாதம் முழுவதும் பெற்றுக் கொள்ளலாம்.
5. கொரோனா தடுப்பு உபகரணங்கள், மருந்துக்கு ஜி.எஸ்.டி. வரியில் இருந்து விலக்கு- மத்திய அரசு
பெரும்பாலான கொரோனா தடுப்பு உபகரணங்கள், மருந்துக்கு ஜி.எஸ்.டி.வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.