உலக செய்திகள்

ரஷ்யா 8 நாடுகளுடனான சர்வதேச விமான சேவையை மீண்டும் இயக்க முடிவு + "||" + Russia decides to resume international flights with 8 countries

ரஷ்யா 8 நாடுகளுடனான சர்வதேச விமான சேவையை மீண்டும் இயக்க முடிவு

ரஷ்யா 8 நாடுகளுடனான சர்வதேச விமான சேவையை மீண்டும் இயக்க முடிவு
ஆஸ்திரியா உள்பட 8 நாடுகளுடன் வரும் 10ந்தேதி முதல் குறிப்பிட்ட அளவில் சர்வதேச விமான சேவையை மீண்டும் இயக்க ரஷ்யா முடிவு செய்துள்ளது.
மாஸ்கோ,

உலகம் முழுவதும் கொரோனா வைரசின் அச்சுறுத்தல் நீடித்து வரும் நிலையில், பல்வேறு நாடுகளும் சர்வதேச விமான போக்குவரத்து சேவையை நிறுத்தி வைத்தன.  இதில் ரஷ்யாவும் ஒன்று.

இந்த நிலையில், ரஷ்ய அரசு வரும் 10ந்தேதி முதல் ஆஸ்திரியா, ஹங்கேரி, லெபனான், லக்சம்பர்க், மொரீசியஸ், மொராக்கோ, குரோசியா மற்றும் அல்பேனியா ஆகிய 8 நாடுகளுடனான சர்வதேச விமான சேவையை குறிப்பிட்ட அளவில் மீண்டும் இயக்குவது என முடிவு செய்துள்ளது.

இதன்படி, ஆஸ்திரியாவின் வியன்னா-மாஸ்கோ செல்லும் விமானம், ஹங்கேரி நாட்டின் புடாபெஸ்ட்-மாஸ்கோ செல்லும் விமானம், மொரீசியஸ் நாட்டின் போர்ட் லூயிஸ்-மாஸ்கோ செல்லும் விமானம், மொராக்கோ நாட்டின் ரபாத்-மாஸ்கோ செல்லும் விமானம், குரோசியா நாட்டின் ஜக்ரெப்-மாஸ்கோ செல்லும் விமானம் ஆகியவை வாரம் இரு முறை என்ற அடிப்படையில் இயக்கப்பட உள்ளன.

இதேபோன்று, லெபனான் நாட்டின் பெய்ரூட்-மாஸ்கோ செல்லும் விமானம், லக்சம்பர்க் நாட்டின் லக்சம்பர்க்-மாஸ்கோ செல்லும் விமானம் ஆகியவை வாரம் ஒரு முறை என்ற அடிப்படையில் இயக்கப்பட உள்ளன.  அல்பேனியா நாட்டின் திரானா-மாஸ்கோ செல்லும் சார்ட்டர்டு விமானங்களும் வாரம் ஒரு முறை என்ற அடிப்படையில் இயக்கப்பட உள்ளன.


தொடர்புடைய செய்திகள்

1. தொழில் அதிபர் ஆகிறார் சினிமாவை விட்டு விலக காஜல் அகர்வால் முடிவு?
நடிகை காஜல் அகர்வால் சினிமாவை விட்டு விலகி கணவர் கவுதம் கிச்சலுவின் தொழில் நிறுவனத்தை நடத்த முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
2. மாணவர்களின் உயிர்காக்கும் துணிச்சலான முடிவு
மாணவர்களின் உயிரா? தேர்வா? எது முக்கியம் என்ற கேள்வி எழுந்தபோது, தமிழக அரசுக்கு, ‘மாணவர்களாம் இளம் பிஞ்சுகளின் உயிர்தான் முக்கியம்’, ‘சுவர் இருந்தால்தானே சித்திரம் வரைய முடியும்’ என்ற வகையில் பிளஸ்-2 பொதுத்தேர்வை ரத்து செய்து மிக துணிச்சலான முடிவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்து இருக்கிறார்.
3. ஜப்பானில் வரும் 21ந்தேதி முதல் பணியிடங்களில் கொரோனா தடுப்பூசிகள் போட முடிவு
ஜப்பான் நாட்டில் வரும் 21ந்தேதி முதல் பணியிடங்கள் மற்றும் பல்கலை கழகங்களில் கொரோனா தடுப்பூசிகள் போட முடிவாகியுள்ளது.
4. கொலை வழக்கு: மல்யுத்த வீரர் சுஷில் குமாரின் நெருங்கிய நண்பர் அரசு சாட்சியாக மாற முடிவு
கொலை வழக்கில் மல்யுத்த வீரர் சுஷில் குமாரின் நெருங்கிய நண்பர் அரசு சாட்சியாக மாறுவதற்கு முடிவு செய்துள்ளார்.
5. வெளிநாடுகளில் பணிபுரியும் பெண்களின் நலனுக்காக ஒன் ஸ்டாப் மையங்கள்: மத்திய அரசு முடிவு
வெளிநாடுகளில் பணிபுரியும் பெண்களின் நலனுக்காக 9 நாடுகளில் 10 ஒன் ஸ்டாப் மையங்களை மத்திய அரசு திறக்க இருக்கிறது.