உலக செய்திகள்

ஜப்பானில் வரும் 21ந்தேதி முதல் பணியிடங்களில் கொரோனா தடுப்பூசிகள் போட முடிவு + "||" + Japan has decided to put corona vaccines in the workplace from the 21st

ஜப்பானில் வரும் 21ந்தேதி முதல் பணியிடங்களில் கொரோனா தடுப்பூசிகள் போட முடிவு

ஜப்பானில் வரும் 21ந்தேதி முதல் பணியிடங்களில் கொரோனா தடுப்பூசிகள் போட முடிவு
ஜப்பான் நாட்டில் வரும் 21ந்தேதி முதல் பணியிடங்கள் மற்றும் பல்கலை கழகங்களில் கொரோனா தடுப்பூசிகள் போட முடிவாகியுள்ளது.
டோக்கியோ,

ஜப்பான் நாட்டில் இதுவரை 7.45 லட்சம் பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.  அவர்களில் 6.72 லட்சம் பேர் குணமடைந்து சென்றுள்ளனர்.  மொத்தம் 12,926 பேர் உயிரிழந்து உள்ளனர்.

கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணிகளை அந்நாடு தீவிரப்படுத்தி உள்ளது.  ஜப்பானில் 12 முதல் 15 வயதுக்கு உட்பட்டோருக்கு பைசர் தடுப்பூசி போடவும் அரசு ஒப்புதல் அளித்து உள்ளது.

இந்நிலையில், தடுப்பூசி போடும் பணியை பரவலாக நடைமுறைப்படுத்தும் முயற்சியாக வரும் 21ந்தேதி முதல் பணியிடங்கள் மற்றும் பல்கலை கழகங்களில் கொரோனா தடுப்பூசிகளை போடுவது என முடிவாகியுள்ளது.

இதுபற்றி ஜப்பான் நாட்டின் தலைமை அமைச்சரவை செயலாளர் கட்சுனோபு கட்டோ செய்தியாளர்கள் சந்திப்பில் இன்று பேசும்பொழுது, நாட்டில் கொரோனா பாதிப்புகளை தடுக்கவும், பரவலை கட்டுப்படுத்தவும் தடுப்பூசிகள் போடும் பணியை துரிதப்படுத்த அரசு தீவிர முனைப்புடன் உள்ளது.

அதனால், வருகிற 21ந்தேதி முதல் பணியிடங்கள் மற்றும் பல்கலை கழகங்களில் கொரோனா தடுப்பூசிகள் போடுவது என முடிவு செய்யப்பட்டு உள்ளது.  இதற்காக அந்த பகுதிகளில், மாடர்னா கொரோனா தடுப்பூசிகள் பயன்படுத்தப்படும் என கூறியுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. வெளிநாடு செல்லும் பயணிகளுக்கு தடுப்பூசி பாஸ்போர்ட்: ஜப்பான் அரசு முடிவு
ஜப்பான் நாட்டில் இருந்து வெளிநாடு செல்லும் பயணிகளுக்கு தடுப்பூசி பாஸ்போர்ட் வழங்க அரசு முடிவு செய்துள்ளது.
2. 12,100 கொரோனா தடுப்பூசிகள் வந்தன
குமரி மாவட்டத்துக்கு 12 ஆயிரத்து 100 தடுப்பூசிகள் வந்தன. அவை இன்று (திங்கட்கிழமை) 26 முகாம்களில் பொதுமக்களுக்கு போடப்படுகிறது.
3. தொழில் அதிபர் ஆகிறார் சினிமாவை விட்டு விலக காஜல் அகர்வால் முடிவு?
நடிகை காஜல் அகர்வால் சினிமாவை விட்டு விலகி கணவர் கவுதம் கிச்சலுவின் தொழில் நிறுவனத்தை நடத்த முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
4. மாணவர்களின் உயிர்காக்கும் துணிச்சலான முடிவு
மாணவர்களின் உயிரா? தேர்வா? எது முக்கியம் என்ற கேள்வி எழுந்தபோது, தமிழக அரசுக்கு, ‘மாணவர்களாம் இளம் பிஞ்சுகளின் உயிர்தான் முக்கியம்’, ‘சுவர் இருந்தால்தானே சித்திரம் வரைய முடியும்’ என்ற வகையில் பிளஸ்-2 பொதுத்தேர்வை ரத்து செய்து மிக துணிச்சலான முடிவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்து இருக்கிறார்.
5. தடுப்பூசிகள் போட்டும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் மரணம் நிகழாது: எய்ம்ஸ் தகவல்
தடுப்பூசி செலுத்திய பிறகு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த மரணமும் ஏற்படவில்லை என்று எய்ம்ஸ் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.