உலக செய்திகள்

பாகிஸ்தானில் மழை பாதிப்புக்கு 10 பேர் பலி + "||" + 10 killed in Pakistan rains

பாகிஸ்தானில் மழை பாதிப்புக்கு 10 பேர் பலி

பாகிஸ்தானில் மழை பாதிப்புக்கு 10 பேர் பலி
பாகிஸ்தான் நாட்டில் பஞ்சாப் மாகாணத்தில் மழை தொடர்புடைய சம்பவங்களில் சிக்கி 10 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.
பஞ்சாப்,

பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்துள்ளது.  இதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பலர் மழை தொடர்புடைய சம்பவங்களில் சிக்கி உயிரிழந்து உள்ளனர்.

இதுபற்றி வெளியான தகவலில், பஞ்சாப் மாகாணத்தின் ஒகாரா நகரில் தாரிக் அபாத் என்ற பகுதியில் மேற்கூரை ஒன்று இடிந்து விழுந்ததில் 8 பேர் கொல்லப்பட்டனர்.  அவர்களில் 4 பேர் குழந்தைகள், 3 பேர் பெண்கள்.  மற்றும் ஆண் ஒருவரும் அடங்குவர்.  3 பேர் காயமடைந்தனர்.  அவர்களின் அடையாளம் பற்றி தெரியவரவில்லை.

இந்த சம்பவம் பற்றி அறிந்ததும் அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மற்றும் மீட்பு குழுவினர் உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டனர்.  அவர்கள் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டனர்.  காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இதேபோன்று பஞ்சாப் மாகாணத்தின் ஒகாரா மாவட்டத்தில் ஹஜ்ரா ஷா முகீம் என்ற பகுதியில் நடந்து சென்றவர் மீது மழையால் சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் பலியானார்.  இதே மாகாணத்தில் டோபா தேக் சிங் மாவட்டத்தில் மின்னல் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்து உள்ளார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.