மாநில செய்திகள்

ஊரடங்கை நீடித்துக்கொண்டே செல்ல முடியாது- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் + "||" + curfew cannot be extended; Soon end to covid-19 - MK Stalin

ஊரடங்கை நீடித்துக்கொண்டே செல்ல முடியாது- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

ஊரடங்கை நீடித்துக்கொண்டே செல்ல முடியாது- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
ஊரடங்கை நீட்டிக்கொண்டே செல்ல முடியாது; கொரோனாவிற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.
சென்னை

மக்களை அச்சுறுத்தும் வகையில் பரவி வரும் கொரோனாவிற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக டுவிட்டரில்  அவர் பதிவிட்டுள்ள வீடியோவில் கூறி உள்ளதாவது:-

மக்கள் கட்டுப்பாடுகளை முறையாகக் கடைப்பிடித்தால் ஊரடங்கிற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைத்துவிடலாம்.</p>

ஆக்ஸிஜன் அளவு 90-க்கு கீழ் இருந்தால் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை: வழிகாட்டு நெறிமுறை

கொரோனாவால் அடித்தட்டு மக்களின் பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது. அதற்காக மாதம் 2 ஆயிரம் வீதம் இரு மாதங்களுக்கு 4 ஆயிரம் வழங்கப்படுகிறது. 13 பொருள்கள் அடங்கிய தொகுப்பும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆனால் இதனை இப்படி நீட்டித்துக்கொண்டிருக்க முடியாது.ஊரடங்கை நீட்டிக்கொண்டே செல்ல முடியாது. கொரோனா பரவலுக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும்.

மக்களை காக்கும் மகத்தான பணியில் என்னை நான் ஒப்படைத்துள்ளேன். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கையே தேவை. தமிழக அரசு மக்களுக்கு நம்பிக்கையூட்டும் அரசாக செயல்படும்

கொரோனாவை வெல்வோம்!

நமக்கான வளம் மிகுந்த தமிழ்நாட்டை அமைப்போம்! 

என கூறி உள்ளார்.தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா தடுப்பு உபகரணங்கள், மருந்துக்கு ஜி.எஸ்.டி. வரியில் இருந்து விலக்கு- மத்திய அரசு
பெரும்பாலான கொரோனா தடுப்பு உபகரணங்கள், மருந்துக்கு ஜி.எஸ்.டி.வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
2. தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களின் செல்போன் எண்கள் முடக்கம்-பாகிஸ்தான் அறிவிப்பு
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களின் செல்போன் எண்கள் முடக்கப்படும் என அம்மாகாண சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
3. நாடு முழுவதும் கொரோனா 2 ஆம் அலையில் 719 டாக்டர்கள் பலி
நாடு முழுவதும் கொரோனா 2 ஆம் அலையில் 719 டாக்டர்கள் பலியாகி உள்ளதாக இந்திய மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
4. வண்டலூர் சிங்கங்களையே மிரட்டும் புதிய உயிர்க்கொல்லி வைரஸ்! தனிமைபடுத்தி சிகிச்சை
வண்டலூர் பூங்கா சிங்கங்களுக்கு ஏற்பட்டது கொரோனா தொற்று இல்லை அதை விட அதிகம் பாதிப்பு ஏற்படுத்தும் கேனைன் டிஸ்டெம்பர் வைரஸ் என்ற நோய் என தெரியவந்து உள்ளது.
5. ‘உயிரியல் ஆயுதம்’ கருத்து தெரிவித்த : நடிகையும் மாடலுமான ஆயிஷா சுல்தானா மீது தேசத்துரோக வழக்கு
‘உயிரியல் ஆயுதம்’ என கருத்து தெரிவித்த சினிமா நடிகையும், மாடலுமான ஆயிஷா சுல்தானா மீது லட்சத்தீவு போலீசார் தேசத்துரோக வழக்கு பதிவு செய்துள்ளனர்