தேசிய செய்திகள்

டெல்லியில் கொரோனா தொற்று பாதிப்பு விகிதம் 0.78 % ஆக குறைந்தது + "||" + COVID19 | Delhi reports 576 new cases (positivity rate 0.78%), 103 deaths, and 1,287 recoveries in the last 24 hours

டெல்லியில் கொரோனா தொற்று பாதிப்பு விகிதம் 0.78 % ஆக குறைந்தது

டெல்லியில் கொரோனா தொற்று  பாதிப்பு  விகிதம் 0.78 % ஆக குறைந்தது
டெல்லியில் நேற்று 624- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்த நிலையில், இன்று பாதிப்பு எண்ணிக்கை மேலும் குறைந்துள்ளது.
புதுடெல்லி,

கொரோனா வைரசின் 2-வது அலையில் மிகக்கடுமையான பாதிப்பை டெல்லி எதிர்கொண்டது. ஏப்ரல் மாத இறுதியில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 28 ஆயிரத்தை தாண்டியது. இதனால், டெல்லி மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பியது. கொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டு வர டெல்லி அரசு கடுமையான ஊரடங்கை அமல்படுத்தியது.

 இதன் பலனாக டெல்லியில் மெல்ல மெல்ல கொரோனா வைரஸ் கட்டுக்குள் வரத்தொடங்கியது.  கடந்த சில வாரங்களாக டெல்லியில் ஒருநாள் கொரோனா பாதிப்பு சீராக சரிந்து வருவது மக்களுக்கு சற்று ஆறுதல் அளிக்கும் விஷயமாக இருந்து வருகிறது. தொற்று பாதிப்பு குறைந்தாலும் டெல்லியில் ஜுன் 7 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. எனினும், தொழில் நிறுவனங்கள் செயல்பட தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

டெல்லியில் நேற்று 624- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்த நிலையில், இன்று பாதிப்பு எண்ணிக்கை மேலும் குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 576- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் கொரோனா தொற்று விகிதம் 0.78 சதவிகிதமாக  உள்ளது.  

கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 103- பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து 1,287- பேர் குணம் அடைந்துள்ளனர். டெல்லியில் தொற்று பாதிப்புடன் 9,364-பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  டெல்லியில் இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 14,27,439- ஆக உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் புதிதாக 1,785 பேருக்கு கொரோனா பாதிப்பு!
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,785 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 39,361- பேருக்கு கொரோனா
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 39,361- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. மலேசியாவில் புதிய உச்சம் தொட்ட கொரோனா; 17,045 பேருக்கு பாதிப்பு
மலேசியாவில் கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத வகையில் கொரோனா பாதிப்பு புதிய உச்சம் தொட்டுள்ளது.
4. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 39,742- பேருக்கு கொரோனா
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 39,742- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. தமிழகத்தில் மேலும் குறைந்த கொரோனா பாதிப்பு: புதிதாக 1,819 பேருக்கு தொற்று!
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,819 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.