தேசிய செய்திகள்

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 20 லட்சம் மாதிரிகள் பரிசோதனை + "||" + 21 lakh samples were tested in India in a single day yesterday

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 20 லட்சம் மாதிரிகள் பரிசோதனை

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 20 லட்சம் மாதிரிகள் பரிசோதனை
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 21,59,873 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,

இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா பரவல் வேகம் சற்று குறைந்து வருகிறது. கொரோனா பரவலின் 2வது அலையை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்ட தீவிர நடவடிக்கைகள் காரணமாக நோய்த் தொற்றில் இருந்து குணமடைபவர்களின் விகிதம் அதிகரித்துள்ளது.

இன்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பின்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,34,154 பேருக்கு கொரோனா தொர்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் நேற்றைய தினம் 2,11,499 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். 

மேலும் கொரோனா பரிசோதனைகளையும் அதிக அளவில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் நாடு முழுவதும் 21,59,873 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை இந்தியாவில் மொத்தம் 35,37,82,648 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் இதுவரை செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 48 கோடியை கடந்தது
இந்தியாவில் இன்று மாலை 7 மணி நிலவரப்படி, இதுவரை செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 48 கோடியை கடந்துள்ளது.
2. இந்தியாவில் கொரோனா 2-வது அலை இன்னும் முடிவுக்கு வரவில்லை; மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்
இந்தியாவில் கொரோனா 2-வது அலை இன்னும் முடிவுக்கு வரவில்லை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
3. இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 30 ஆயிரமாக குறைவு
இந்தியாவில் நேற்று 40 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, தினசரி பாதிப்பு இன்று 30 ஆயிரமாக குறைந்துள்ளது.
4. உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 18 கோடியை தாண்டியது
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19.95 கோடியாக உயர்ந்துள்ளது.
5. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 40,134 பேருக்கு கொரோனா தொற்று
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 40 ஆயிரத்து 134 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.