தேசிய செய்திகள்

கர்நாடகாவில் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பு - எடியூரப்பா அறிவிப்பு + "||" + Lockdown In Karnataka Extended Till June 14

கர்நாடகாவில் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பு - எடியூரப்பா அறிவிப்பு

கர்நாடகாவில் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பு - எடியூரப்பா அறிவிப்பு
கர்நாடகாவில் அமலில் உள்ள ஊரடங்கு வருகிற 14-ந் தேதி வரை மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்படுவதாக முதல்-மந்திரி எடியூரப்பா நேற்று அறிவித்தார்.
பெங்களூரு,

கர்நாடகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் நோக்கத்தில் கடந்த மே மாதம் 11-ந் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பிறகும் கொரோனா பரவல் அதிகமாக இருந்ததால், கடந்த மாதம் 24-ந் தேதி முதல் வருகிற 7-ந் தேதி காலை 6 மணி வரை மேலும் 14 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. அந்த ஊரடங்கு வருகிற 7-ந் தேதி காலை நிறைவடைகிறது.

கர்நாடகத்தில் தற்போது கொரோனா பாதிப்பு விகிதம் 12 சதவீதமாக உள்ளது. இந்த நிலையில் கொரோனா தடுப்பு நிபுணர் குழு, கர்நாடகத்தில் அமலில் உள்ள ஊரடங்கை மேலும் ஒரு வாரம் நீட்டிக்க வேண்டும் என்று அரசுக்கு பரிந்துரை செய்தது. அதன்படி வருகிற 7-ந் தேதி காலை 6 மணி முதல் 14-ந் தேதி காலை 6 மணி வரை மேலும் 7 நாட்களுக்கு ஊரடங்கை நீட்டித்து முதல்-மந்திரி எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. கர்நாடகாவில் இன்று மேலும் 1,705 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
கர்நாடகாவில் இன்று மேலும் 1,705 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. கர்நாடகாவில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு: புதிதாக 1,653 பேருக்கு தொற்று உறுதி
கர்நாடகாவில் கொரோனா தொற்றுக்கு மேலும் 31 பேர் உயிரிழந்துள்ளனர்.
3. கர்நாடகாவில் இன்று மேலும் 1,639 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
கர்நாடகாவில் இன்று மேலும் 1,639 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. கர்நாடகாவில் ஆட்சியை கவிழ்க்க பெகாசஸ் உளவு மென்பொருள் பயன்படுத்தப்பட்டுள்ளது: காங்.குற்றச்சாட்டு
மத்திய அரசின் அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவது போன்ற நடவடிக்கைகளால் இந்தியாவில் ஜனநாயகம் செத்துவிட்டது என காங்கிரஸ் கடுமையாக சாடியுள்ளது.
5. கர்நாடகத்தில் புதிதாக 1,291-பேருக்கு கொரோனா தொற்று
கர்நாடகத்தில் 12 மாவட்டங்களில் கொரோனாவுக்கு உயிரிழப்பு இல்லை என்று சுகாதாரத்துறை கூறியுள்ளது.