தேசிய செய்திகள்

கட்சி மேலிடம் கூறினால் உடனடியாக ராஜினமா செய்வேன்: எடியூரப்பா பேட்டி + "||" + 'Will quit as CM the day central leadership asks me to': Yediyurappa on replacement speculations

கட்சி மேலிடம் கூறினால் உடனடியாக ராஜினமா செய்வேன்: எடியூரப்பா பேட்டி

கட்சி மேலிடம் கூறினால் உடனடியாக ராஜினமா செய்வேன்: எடியூரப்பா பேட்டி
கட்சி மேலிடம் கூறினால் உடனடியாக ராஜினமா செய்வேன் என கர்நாடகா முதல் மந்திரி எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
பெங்களூரு,

கர்நாடகாவில் முதல் மந்திரி எடியூரப்பாவை கட்சி மேலிடம் மாற்ற விரும்புவதாக  அவ்வப்போது செய்திகள் வெளியாகி வரும் நிலையில், இது குறித்து முதல் முறையாக மவுனம் கலைத்துள்ள எடியூரப்பா, ”கட்சி மேலிடம் கூறினால் உடனடியாக ராஜினாமா செய்வேன்” என்றார்.

 ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த எடியூரப்பா, “  பாஜகவில் மாற்று தலைமை இல்லை என நான் கருதவில்லை. டெல்லியில் உள்ள கட்சியின் உயர்மட்ட தலைமை கூறும் வகையில் நான் முதல் மந்திரியாக இருப்பேன். அவர்கள் எப்போது சொல்கிறார்களோ அப்போது பதவியில் இருந்து விலகத்தயார்” என்றார். 

எடியூரப்பாவின் மகனும் மாநில பாஜக துணைத்தலைவருமான விஜேந்திரா நேற்று பாஜக தேசியத்தலைவர் ஜேபி நட்டாவை சந்தித்துப் பேசியிருந்த நிலையில், எடியூரப்பா மேற்கண்டவாறு பேசியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

1. எடியூரப்பா நியமித்த முதல்-மந்திரியின் செயலாளர்கள்-ஆலோசகர்கள் நீக்கம் - கர்நாடக அரசு உத்தரவு
எடியூரப்பா முதல்-மந்திரியாக இருந்த போது நியமித்த செயலாளர்கள் மற்றும் ஆலோசகர்கள் அனைவரும் நீக்கப்பட்டுள்ளனர்.
3. பிரதமர் மோடியுடன் கர்நாடக முதல் மந்திரி சந்திப்பு
கர்நாடகத்தின் புதிய முதல் மந்திரி பசவராஜ் பொம்மை இன்று பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார்.
4. கர்நாடகாவின் புதிய முதல் மந்திரியாக பசவராஜ் பொம்மை பதவியேற்பு
கர்நாடகாவின் 23-வது முதல் மந்திரியாக பசவராஜ் பொம்மை பதவியேற்றுக்கொண்டார்.
5. கர்நாடக புதிய முதல் மந்திரி யார்? இன்று மாலை 5 மணிக்கு பாஜக ஆலோசனை
கர்நாடக முதல்-மந்திரி பதவியை எடியூரப்பா நேற்று ராஜினாமா செய்தார். அரசின் 2 ஆண்டுகள் சாதனை விழா மேடையிலேயே கண்ணீர் சிந்தியபடி இதனை அவர் அறிவித்தார்.