உலக செய்திகள்

அமெரிக்காவில் இதுவரை 30 கோடி தடுப்பூசி டோஸ்கள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக தகவல் + "||" + Reports that 30 crore vaccine doses have been given to public in US

அமெரிக்காவில் இதுவரை 30 கோடி தடுப்பூசி டோஸ்கள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக தகவல்

அமெரிக்காவில் இதுவரை 30 கோடி தடுப்பூசி டோஸ்கள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக தகவல்
அமெரிக்காவில் இதுவரை 30 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாஷிங்டன்,

உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. கொரோனா வைரசால் அதிக அளவிலான பாதிப்புகளையும், உயிரிழப்புகளையும் அமெரிக்கா சந்தித்துள்ளது. அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அரசு, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

அமெரிக்காவில் மாடர்னா, பைசர்/பையோஎன்டெக் மற்றும் ஜான்சன் & ஜான்சன் ஆகிய நிறுவனங்கள் தயாரித்த கொரோனா தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் அமெரிக்காவில் இதுவரை மொத்தம் 30,02,68,730 தடுப்பூசி டோஸ்கள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

கடந்த 4 ஆம் தேதி(வெள்ளிக்கிழமை) வெளியான தகவலின்படி மொத்தம் 29,91,20,522 கொரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் அமெரிக்காவில் இதுவரை 17,02,72,150 பேர் முதல் டோஸ் தடுப்பூசியை செலுத்திக் கொண்டதாகவும், 13,81,12,702 பேர் தடுப்பூசியின் 2 டோஸ்களையும் செலுத்திக் கொண்டதாகவும் அமெரிக்க சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்காவில் தடுப்பூசி செலுத்தியவர்களும் கட்டாயம் முக கவசம் அணிய அறிவுறுத்தல்
அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களும் பொது இடங்களில் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
2. மத்திய மந்திரி ஜெய்சங்கருடன் அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன் சந்திப்பு
2 நாள்கள் சுற்றுப்பயணமாக அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன் நேற்று இந்தியா வருகை தந்தார்.
3. அமெரிக்காவில் புழுதி புயலால் 22 வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி சங்கிலி தொடர் விபத்து; 8 பேர் உடல் நசுங்கி சாவு
அமெரிக்காவின் உட்டா மாகாணம் கனோஸ் நகருக்கு அருகே மிகப்பெரிய நெடுஞ்சாலை உள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை இந்த நெடுஞ்சாலையில் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து சென்று கொண்டிருந்தன. விடுமுறை நாள் என்பதால் வழக்கத்தை விடவும் போக்குவரத்து மிகவும் நெரிசலாக இருந்தது.
4. அமெரிக்காவில் 34.2 கோடி தடுப்பூசி டோஸ்கள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக தகவல்
அமெரிக்காவில் இதுவரை 34.2 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
5. இரு நாடுகளின் மோசமான உறவுக்கு அமெரிக்காவே காரணம்: சீனா குற்றச்சாட்டு
உலகின் இரு பெரும் பொருளாதார நாடுகளான அமெரிக்கா மற்றும் சீனா இடையே கடுமையான மோதல் நிலவுகிறது. இரு நாடுகளின் உறவும் சுமுகமான நிலையில் இல்லை.