உலக செய்திகள்

பாகிஸ்தானில் 2 விரைவு ரயில்கள் மோதிய விபத்தில் சிக்கி 30 பேர் பலி: பலர் காயம் + "||" + 2 trains collide in southern Pakistan; 30 killed, several injured

பாகிஸ்தானில் 2 விரைவு ரயில்கள் மோதிய விபத்தில் சிக்கி 30 பேர் பலி: பலர் காயம்

பாகிஸ்தானில் 2 விரைவு ரயில்கள் மோதிய விபத்தில் சிக்கி 30 பேர் பலி: பலர் காயம்
பாகிஸ்தானில் 2 விரைவு ரயில்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 30 பேர் பரிதாபமாக பலியானார்கள். மேலும் பலர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இஸ்லாமாபாத், 

தெற்கு பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் கோட்கி மாவட்டத்தில் சர் சையது விரைவு ரயிலும், மில்லத் விரைவு ரயிலும் இன்று காலை நேருக்கு நேர் மோதின. 

இந்த சம்பவத்தில் 30 பேர் பலியானதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் கோட்கி மாவட்டத்தின் போலீஸ் அதிகாரிகள் மற்றும் மீட்புக்குழுவினர் தெரிவித்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தடம் புரண்டதற்கும் அடுத்தடுத்த மோதலுக்கும் என்ன காரணம் என்பது உடனடியாகத் தெரியவில்லை. சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்புக்குழுவின,ர் மீட்பு நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  

தொடர்புடைய செய்திகள்

1. மின்வயர் அறுந்து கியாஸ் குழாயில் விழுந்ததால் ஓட்டலில் தீ விபத்து
மின்வயர் அறுந்து கியாஸ் குழாயில் விழுந்ததால் ஓட்டலில் தீ விபத்து.
2. வேகமாக கார் ஓட்டி விபத்து நடிகை யாஷிகா ஆனந்த் கைது ஆவாரா? பலியான தோழி பற்றி உருக்கமான தகவல்
வேகமாக கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய நடிகை யாஷிகா ஆனந்த் சிகிச்சை முடிந்ததும் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. பலியான தோழி பற்றியும் உருக்கமான தகவல் வெளியாகியுள்ளது.
3. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஆட்சியை பிடித்தது இம்ரான்கான் கட்சி..
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தேர்தலில் இம்ரான்கான் கட்சி வெற்றி பெற்றது.
4. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தேர்தலில் இம்ரான்கான் கட்சி வெற்றி
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 53 இடங்களை கொண்ட சட்டசபைக்கு முன்தினம் தேர்தல் நடந்தது. மொத்தமுள்ள 53 இடங்களில் 8 இடங்கள் நியமன உறுப்பினர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள சூழலில், மீதமுள்ள 45 இடங்களுக்கு தேர்தல் நடந்தது.
5. சிங்கப்பெருமாள் கோவில் அருகே தனியார் நிறுவனத்தில் திடீர் தீ விபத்து
சிங்கப்பெருமாள் கோவில் அருகே தனியார் நிறுவனத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.