மாநில செய்திகள்

சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலை உயர்வு + "||" + Petrol and diesel prices go up in Chennai today

சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலை உயர்வு

சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலை உயர்வு
சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.96.94-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை,

பெட்ரோல், டீசல் விலையை பொறுத்தவரையில் தினசரி விலை நிர்ணயம் என்ற நடைமுறை வந்ததில் இருந்து தொடர்ந்து அதிகரித்து வந்தது. அதன்படி, இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து அதன் விலை தாறுமாறாக உயர்ந்து கொண்டே வருகிறது.

அந்த வகையில் கடந்த மாதத்தின் தொடக்கத்தில் இருந்து ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொட்டு, பெட்ரோல், டீசல் விலை பயணித்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 4-ந்தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.96-ஐ கடந்தும், டீசல் கடந்த 1-ந்தேதி ரூ.90-ஐ கடந்தும் விற்பனை ஆனது. அதன் தொடர்ச்சியாக விலை ஏறுமுகத்திலேயே இருந்து வருகிறது.

இன்றைய நிலவரப்படி சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 23 காசுகள் அதிகரித்து ரூ.96.94-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே சமயம் டீசல் விலை லிட்டருக்கு 28 காசுகள் அதிகரித்து ரூ.91.15-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. த.வா.க. பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு
கடலூரில் தமிழக வாழ்வுரிமை கட்சி பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடா்பாக தி.மு.க. நிா்வாகி உள்பட 5 போ் மீது போலீசாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.
2. பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி வசூல் 88 % அதிகரிப்பு
பெட்ரோல் ஒரு லிட்டருக்கான கலால் வரி ரூ.19.98-ல் இருந்து ரூ.32.9 ஆகவும், டீசல் ஒரு லிட்டருக்கான கலால் வரி ரூ.15.83-ல் இருந்து ரூ.31.8 ஆகவும் உயர்த்தப்பட்டன.
3. சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி நேற்றைய விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.
4. பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
5. சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி நேற்றைய விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.