தேசிய செய்திகள்

ஆந்திரா, டெல்லி, மேற்கு வங்காளத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் + "||" + Today's corona vulnerability situation in Andhra Pradesh, Delhi and West Bengal

ஆந்திரா, டெல்லி, மேற்கு வங்காளத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்

ஆந்திரா, டெல்லி, மேற்கு வங்காளத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்
ஆந்திரா, டெல்லி மற்றும் மேற்கு வங்காள மாநிலங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் வெளியாகி உள்ளது.
கொல்கத்தா, 

மேற்குவங்காளம்

மேற்கு வங்காள மாநில சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, மாநிலத்தில் புதிதாக 5,384 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மேற்கு வங்காளத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 14,42,830 ஆக உயர்ந்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 95 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததையடுத்து, கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16,555 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் கடந்த 24 மணி நேரத்தில் 10,512 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 14,11,573 ஆக அதிகரித்துள்ளது. மேற்கு வங்காளத்தில் தற்போது 14,702 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

ஆந்திரா

ஆந்திரமாநில சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, மாநிலத்தில் புதிதாக 8,766 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆந்திராவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 17,79,773 ஆக உயர்ந்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 67 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததையடுத்து, கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11,696 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் கடந்த 24 மணி நேரத்தில் 12,292 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 16,64,082 ஆக அதிகரித்துள்ளது. ஆந்திராவில் தற்போது 1,03,995 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

டெல்லி 

டெல்லி மாநில சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, மாநிலத்தில் புதிதாக 337 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் டெல்லியில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 14,30,128 ஆக உயர்ந்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 36 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததையடுத்து, கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24,704 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் கடந்த 24 மணி நேரத்தில் 752 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 14,00,913 ஆக அதிகரித்துள்ளது. டெல்லியில் தற்போது 4,511 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா பாதிப்பு: ஆந்திராவில் மேலும் 77 பேர் உயிரிழப்பு
ஆந்திரப் பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,796 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. கொரோனா 2-வது அலை; ஆந்திரா, பஞ்சாப், உத்தரகாண்ட் மாநிலங்களில் கொரோனா ஊரடங்கு நீட்டிப்பு
ஆந்திரா, பஞ்சாப், உத்தரகாண்ட் மாநிலங்களில் கொரோனா ஊரடங்கை நீட்டித்து அம்மாநில அரசுகள் உத்தரவிட்டுள்ளன.
3. ஒரு நபருக்கு ஒரு பதவி ;கட்சியிலும், ஆட்சியிலும் நடைமுறைபடுத்தும் மம்தா பானர்ஜி
கட்சியிலும், ஆட்சியிலும் ஒரு நபருக்கு ஒரு பதவி என்ற நடைமுறையை மேற்குவங்காள முதல்வர் மம்தா பானர்ஜி கொண்டு வந்துள்ளார்.
4. ஆந்திரா, தெலுங்கானாவில் பெட்ரோல் விலை ரூ.100-ஐ கடந்தது; ராஜஸ்தானில் ரூ.105க்கு விற்பனை
ராஜஸ்தான், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசத்தை தொடர்ந்து ஆந்திரா, தெலுங்கானாவில் பெட்ரோல் விலை ரூ.100-ஐ கடந்தது.
5. ஊரடங்கு விதிமுறைகளை மீறியதாக டெல்லியில் 3 விவசாயிகள் கைது
டெல்லியில் ஊரடங்கு விதிமுறைகளை மீறியதாக 3 விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.