தேசிய செய்திகள்

இந்திய-தாய்லாந்து கடற்படைகள் கூட்டு ரோந்து தொடங்கியது + "||" + 31th edition of India-Thailand Coordinated Patrol underway

இந்திய-தாய்லாந்து கடற்படைகள் கூட்டு ரோந்து தொடங்கியது

இந்திய-தாய்லாந்து கடற்படைகள் கூட்டு ரோந்து தொடங்கியது
இந்திய-தாய்லாந்து கடற்படைகளின் 3 நாள் கூட்டு ரோந்து இன்று தொடங்கியது.
புதுடெல்லி,

அந்தமான் கடலில் இந்திய-தாய்லாந்து கடற்படைகளின் 3 நாள் கூட்டு ரோந்து இன்று தொடங்கியது. இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீனாவின் அதிகரிக்கும் நடவடிக்கைகள் தொடர்பான கவலைகள் எழுந்துள்ள சூழலில் இந்த 31-வது கூட்டு ரோந்து தொடங்கியிருக்கிறது.

இந்திய கடற்படையின் ரோந்து கப்பல் ஐ.என்.எஸ்.சர்யு, தாய்லாந்து கடற்படை கப்பல் கிரபியுடன், டோர்னியர் ரோந்து விமானங்களும் இந்த நிகழ்வில் பங்கேற்றிருக்கின்றன.

கடந்த 2005-ம் ஆண்டு முதல், இந்தியாவும், தாய்லாந்தும் தங்கள் நாட்டு சர்வதேச கடல் எல்லைகளை ஒட்டி ஆண்டுக்கு இருமுறை இந்த ரோந்தை மேற்கொண்டு வருகின்றன. இந்தியப் பெருங்கடல் பகுதியில் உள்ள நாடுகளுக்கு கண்காணிப்பு, பேரிடர் நிவாரணம் மற்றும் இதர உதவிகளை இந்தியக் கடற்படை செய்து வருகிறது.