தேசிய செய்திகள்

ரூ.82,648 கோடிக்கு கோதுமை கொள்முதல் - மத்திய அரசு தகவல் + "||" + Wheat procurement worth Rs 82,648 crore - Central Government

ரூ.82,648 கோடிக்கு கோதுமை கொள்முதல் - மத்திய அரசு தகவல்

ரூ.82,648 கோடிக்கு கோதுமை கொள்முதல் - மத்திய அரசு தகவல்
மத்திய அரசு சாதனை அளவாக 418.47 லட்சம் டன் கோதுமையை ரூ.82,648 கோடிக்கு கொள்முதல் செய்துள்ளது.
புதுடெல்லி,

மத்திய அரசு குறைந்தபட்ச ஆதரவு விலையின்கீழ் உணவு தானியங்களை கொள்முதல் செய்து வருகிறது. ஒரு பக்கம் இந்த திட்டத்துக்கு சட்டபூர்வ அங்கீகாரம் வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி போராடி வருகிற வேளையில் மத்திய அரசு பெருமளவில் கோதுமை கொள்முதல் செய்து சாதனை படைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இது குறித்து மத்திய அரசு சார்பில் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில் இடம் பெற்றிருக்கும் முக்கிய அம்சங்கள் இவை:-

* 2021-22 ரபி சந்தை பருவத்தில் (ஏப்ரல்-மார்ச்) உத்தரபிரதேசம், பீகார், ராஜஸ்தான், குஜராத், இமாசலபிரதேசம், காஷ்மீரில் இருந்து கோதுமை கொள்முதல் செய்வது சுமுகமாக நடந்து வருகிறது.

* ஜூன் 8-ந்தேதி வரையில் 418.47 லட்சம் டன் கோதுமை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டில் இது 373.22 லட்சம் டன்னாக இருந்தது.

* குறைந்த பட்ச ஆதரவு விலை திட்டத்தின் கீழ் கோதுமை கொள்முதலுக்காக 46 லட்சம் விவசாயிகள் ரூ.82 ஆயிரத்து 648 கோடியே 38 லட்சம் பெற்று பலன் அடைந்துள்ளனர்.

* இந்த ஆண்டு கொள்முதல் 2020-21 சந்தை ஆண்டில் கொள்முதல் செய்ததை விட அதிகமாகும். அந்த வகையில் இந்த ஆண்டு கோதுமை கொள்முதல் சாதனை அளவாகும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின்கீழ் மத்திய அரசுக்காக இந்திய உணவு கழகம் கோதுமை கொள்முதல் செய்கிறது. தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின்கீழ் மத்திய அரசு 5 கிலோ கோதுமை, அரிசியை மாதந்தோறும் சுமார் 80 கோடி பேருக்கு வினியோகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.