தேசிய செய்திகள்

உள்ளூர் மொழிகள் அனைத்தும் பாதுகாக்கப்பட வேண்டும்: ராகுல் காந்தி + "||" + Need To Conserve Every Local Language: Rahul Gandhi

உள்ளூர் மொழிகள் அனைத்தும் பாதுகாக்கப்பட வேண்டும்: ராகுல் காந்தி

உள்ளூர் மொழிகள் அனைத்தும் பாதுகாக்கப்பட வேண்டும்: ராகுல் காந்தி
உள்ளூர் மொழிகள் அனைத்தும் பாதுகாக்கப்பட வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,

உள்ளூர் மொழிகள் அனைத்தும் பாதுகாக்கப்பட வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மராட்டிய மாநிலம் மெல்காட் வனப்பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்கள் தடுப்பூசி மீது சந்தேகம் அடைந்து அதை போட்டுக்கொள்ள தயங்கியுள்ளனர். 

இதையடுத்து உள்ளூர் நிர்வாகம் பழங்குடியின மக்கள் பேசும் மொழியான கோர்கு மொழியிலேயே தடுப்பூசி குறித்து எடுத்துரைத்துள்ளனர். இதையடுத்து,  பழங்குடியின மக்கள் தங்கள் அச்சம் தவிர்த்து தடுப்பூசியை போட்டுக்கொள்ள முன்வந்தாக அங்குள்ள ஊடகங்களில் செய்தி வெளியானது. 

இந்த நிலையில், இந்த செய்தியை மேற்கோள் காட்டி கருத்து தெரிவித்துள்ள ராகுல் காந்தி, “ மெல்காட் வனப்பகுதியில் நடந்த நிகழ்வு உள்ளூர் மொழியின் சக்தியையும், அனைத்து மொழிகளையும் பாதுகாக்கப்பட வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்துகிறது” என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. இந்திய தடுப்பூசிகள் மீது ராகுல் காந்திக்கு நம்பிக்கை இல்லை: மத்திய மந்திரி விமர்சனம்
ஜனவரியில் கொரோனா தடுப்பூசி திட்டம் துவங்கிய போது தடுப்பூசியின் செயல் திறன் குறித்து காங்கிரஸ் கட்சியினர் கேள்வி எழுப்பினர் என பிரகலாத் ஜோஷி விமர்சித்துள்ளார்.
2. கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் மராட்டியத்தில் புதிய தளர்வுகள் இன்று நடைமுறைக்கு வருகிறது
மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் அரசு அறிவித்த புதிய தளர்வுகள் இன்று நடைமுறைக்கு வருகிறது.
3. கொரோனா பரவல் எதிரொலி: மராட்டியத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து
மராட்டியத்தில் கொரோனா பரவல் காரணமாக 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக அம்மாநில கல்வி மந்திரி வர்ஷா கெய்க்வாட் அறிவித்துள்ளார்.
4. இலவச கொரோனா தடுப்பூசிக்காக மக்கள் குரல் கொடுக்க வேண்டும்: ராகுல் காந்தி வலியுறுத்தல்
இலவச கொரோனா தடுப்பூசிக்காக மக்கள் குரல் கொடுக்க வேண்டும் என்று ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
5. மக்களுக்கு இலவசமாக தடுப்பூசி செலுத்த மத்திய அரசு முன்வர வேண்டும் - ராகுல் காந்தி
மக்களுக்கு இலவசமாக தடுப்பூசி செலுத்த மத்திய அரசு முன்வர வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார்.