தேசிய செய்திகள்

கொரோனா தடுப்பூசிக்கு காப்புரிமை விலக்கா? - 17-ந்தேதி முக்கிய பேச்சு + "||" + Is the corona vaccine patented? - 17-day keynote address

கொரோனா தடுப்பூசிக்கு காப்புரிமை விலக்கா? - 17-ந்தேதி முக்கிய பேச்சு

கொரோனா தடுப்பூசிக்கு காப்புரிமை விலக்கா? - 17-ந்தேதி முக்கிய பேச்சு
கொரோனா தடுப்பூசிகளின் காப்புரிமைக்கு தற்காலிகமாக விலக்கு அளிப்பது தொடர்பாக 17-ந்தேதி முக்கிய பேச்சுவார்த்தை நடக்க உள்ளது.
புதுடெல்லி,

உலகமே கொரோனா தொற்றுக்காக போராடும் வேளையில், தடுப்பூசிகளின் காப்புரிமை மற்றும் அறிவுசார் சொத்து உரிமைக்கு தற்காலிக விலக்கு அளிக்க வேண்டும் என்று இந்தியாவும், தென் ஆப்பிரிக்காவில் உலக வர்த்தக அமைப்பிடம் கோரிக்கை வைத்துள்ளன. இதனால் உலகம் முழுவதும் தடுப்பூசிகளை தயாரிக்கவும், குறைந்த விலையில் விற்கவும் வழி பிறக்கும் என்பதால் இந்தியாவின் கோரிக்கைக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்தது. 

இந்த நிலையில், உலக வர்த்தக அமைப்பின் ‘டிரிப்ஸ்' கவுன்சிலின் 2 நாள் கூட்டம் நடந்து முடிந்துள்ளது. கொரோனா தடுப்பூசிகளின் காப்புரிமைக்கு தற்காலிகமாக விலக்கு அளிப்பது தொடர்பாக இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இதுபற்றி உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், “தடுப்பூசி காப்புரிமை விலக்கு விவகாரம் தொடர்பாக 2 நாட்கள் பேசப்பட்டது. ஐரோப்பிய கூட்டமைப்பு உள்பட 48 உறுப்பினர்கள் கருத்து தெரிவித்தனர். வரும் 17-ந்தேதி நடக்கிற முழுமையான கூட்டத்தில் டிரிப்ஸ் கவுன்சில் தலைவர் டாக்பின் சோர்லி பேச்சுவார்த்தையை தொடங்குவார். இதன் பொதுக்குழு கூட்டம் நடக்கப்போகிற நாளுக்குள் (ஜூலை 21) இதில் முடிவு எட்டப்பட வேண்டும் என அவர் கூறி உள்ளார்” என்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. மாவட்டத்தில் 127 இடங்களில் சிறப்பு முகாம்கள்: 22,230 பேருக்கு கொரோனா தடுப்பூசி
சேலம் மாவட்டத்தில் நேற்று 127 மையங்களில் நடந்த கொரோனா தடுப்பூசி போடும் சிறப்பு முகாம்களில் 22 ஆயிரத்து 230 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.
2. பெரம்பலூரில் 2,759 பேருக்கு கொரோனா தடுப்பூசி
பெரம்பலூரில் 2,759 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது
3. ஈரோடு மாவட்டத்தில் 42 இடங்களில் முகாம்: அதிகாலையிலேயே நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி போட்டு கொண்ட பொதுமக்கள்
ஈரோடு மாவட்டத்தில் 42 இடங்களில் கோவிஷீல்டு தடுப்பூசி முகாம் நேற்று நடந்தது. இந்த முகாம்களில் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
4. 1 லட்சத்து 26 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
மதுரை மாவட்டத்தில் இதுவரை 1 லட்சத்து 26 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
5. கொரோனா தடுப்பூசிக்காக 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் பெயர்களை பதிவு செய்யலாம் - அதிகாரிகள் தகவல்
கொரோனா தடுப்பூசிக்காக 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் தங்கள் பெயர் விவரங்களை ‘கோ-வின்’இணையதளத்தில் பதிவு செய்யலாம் என்று அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.