தேசிய செய்திகள்

மாநிலங்களுக்கு மேலும் 1.7 லட்சம் குப்பி கருப்பு பூஞ்சை மருந்து மத்திய அரசு ஒதுக்கீடு + "||" + The central government has allocated another 1.7 lakh bottles of black fungus to the states

மாநிலங்களுக்கு மேலும் 1.7 லட்சம் குப்பி கருப்பு பூஞ்சை மருந்து மத்திய அரசு ஒதுக்கீடு

மாநிலங்களுக்கு மேலும் 1.7 லட்சம் குப்பி கருப்பு பூஞ்சை மருந்து மத்திய அரசு ஒதுக்கீடு
மாநிலங்களுக்கு மேலும் 1.7 லட்சம் கருப்பு பூஞ்சை மருந்து குப்பிகளை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
புதுடெல்லி, 

நாடு கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு மத்தியில் கருப்பு பூஞ்சை நோயை எதிர்த்தும் போராடிக்கொண்டிருக்கிறது.

இந்த நோய்க்கான சிகிச்சையில் ஆம்போடெரிசின்-பி மருந்து பயன்படுத்தப்படுகிறது. இந்த மருந்தை மாநிலங்களுக்கு மத்திய அரசு வினியோகம் செய்து வருகிறது.

இந்த மருந்து ஒதுக்கீடு தொடர்பாக மத்திய உரங்கள் மற்றும் ரசாயன துறை மந்திரி சதானந்த கவுடா நேற்று டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “ நாடெங்கும் ஆம்போடெரிசின்-பி மருந்து போதுமான அளவு கிடைப்பதை உறுதி செய்து, கூடுதலாக 1 லட்சத்து 70 ஆயிரம் குப்பி மருந்தை மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு இன்று (நேற்று) ஒதுக்கீடு செய்துள்ளது” என கூறப்பட்டுள்ளது.

மேலும், “கர்நாடகத்துக்கு கூடுதலாக 15 ஆயிரத்து 520 குப்பி மருந்து ஒதுக்கப்பட்டுள்ளது. நோயாளிகளுக்கு சரியான தருணத்தில் சிகிச்சை அளிப்பதகாக அந்த மாநிலத்துக்கு இதுவரையில் 40 ஆயிரத்து 470 குப்பிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன” எனவும் அந்தப் பதிவில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. மாநிலங்களுக்கு மேலும் 11 லட்சம் தடுப்பூசி மத்திய அரசு 3 நாளில் வழங்குகிறது
மாநிலங்களுக்கு மத்திய அரசு 3 நாளில் 11 லட்சம் தடுப்பூசி டோஸ்களை வழங்க உள்ளது.
2. மாநிலங்களுக்கு 34.5 லட்சம் ரெம்டெசிவிர் மருந்து வழங்கப்பட்டுள்ளது - மத்திய அரசு தகவல்
மாநிலங்களுக்கு 34.5 லட்சம் ரெம்டெசிவிர் மருந்து வழங்கப்பட்டுள்ளது என்று மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.