தேசிய செய்திகள்

மும்பை, கொங்கன் பகுதியில் மேலும் 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் + "||" + Mumbai, Konkan region likely to receive heavy rains for another 4 days - Meteorological Center

மும்பை, கொங்கன் பகுதியில் மேலும் 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

மும்பை, கொங்கன் பகுதியில் மேலும் 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
மும்பை உள்ளிட்ட கொங்கன் பகுதியில் மேலும் 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.
மும்பை,

மும்பையில் நேற்று மழை கொட்டித்தீர்த்த பருவமழையால் மும்பை வெள்ளக்காடாக மாறியது. மழைநீரில் பஸ், ரெயில்கள் சிக்கியதால் நடுவழியில் நின்றன. வெளுத்து வாங்கிய கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.

இந்நிலையில், மும்பை உள்ளிட்ட கொங்கன் பகுதியில் மேலும் 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. இதனால் அங்கு 4 நாட்களும் கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. ராய்காட்டில் இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட்டும், அடுத்த 3 நாட்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்டும் விடுக்கப்பட்டு இருக்கிறது.

மேலும் புனே, சத்தாரா, கோலாப்பூரில் வருகிற சனி, ஞாயிற்றுக்கிழமை பலத்த மழை பெய்ய இருப்பதால் ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

1. மும்பையில் இன்று முதல் மீண்டும் செயல்பட தொடங்கிய பேருந்து சேவைகள்
மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் அரசு அறிவித்த புதிய தளர்வுகள் இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
2. கொரோனா குறைந்து வரும் அளவின் அடிப்படையில் நடவடிக்கை; மாவட்டங்களை 5 வகையாக பிரித்து மராட்டியத்தில் புதிய தளர்வுகள்; மும்பையில் பூங்கா, சலூன் திறக்க அனுமதி
மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு புதிய தளர்வுகளை அறிவிக்க அரசு முடிவு செய்தது.
3. மும்பையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,066 பேருக்கு கொரோனா
மும்பையில் தற்போது 27,322 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
4. கொரோனா தடுப்பூசி பற்றாக்குறையை கண்டித்து மும்பையில் காங்கிரஸ் கட்சி போராட்டம்
கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை விவகாரத்தில் மத்திய அரசை கண்டித்து மும்பையில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
5. மும்பையில் கடந்த 3 மாதங்களில் இல்லாத அளவுக்கு கொரோனா பாதிப்பு குறைந்தது
மராட்டியத்தில் கடந்த மாதம் உச்சத்தில் இருந்த கொரோனா பாதிப்பு தற்போது குறைந்து வருகிறது.