தேசிய செய்திகள்

மாநிலங்களுக்கு இலவசமாக தடுப்பூசி: பிரதமர் மோடிக்கு, புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி நன்றி + "||" + Free vaccination for states: Puducherry First-Minister Rangasamy thanks Prime Minister Modi

மாநிலங்களுக்கு இலவசமாக தடுப்பூசி: பிரதமர் மோடிக்கு, புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி நன்றி

மாநிலங்களுக்கு இலவசமாக தடுப்பூசி: பிரதமர் மோடிக்கு, புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி நன்றி
மாநிலங்களுக்கு தேவையான தடுப்பூசியை மத்திய அரசு இலவசமாக வழங்கும் என்ற பிரதமர் மோடியின் அறிவிப்புக்கு புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி நன்றி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி,

மாநிலங்களுக்கு தேவையான தடுப்பூசியை மத்திய அரசு இலவசமாக வழங்கும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். அதேபோல் தீபாவளி பண்டிகை வரை ரேஷன் கடைகளில் உணவுப் பொருட்களை இலவசமாக வழங்கவும் உத்தரவிட்டுள்ளார். 

பிரதமர் மோடியின் இந்த அறிவிப்புக்கு புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்-அமைச்சர் அலுவலக செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பிரதமர் கடந்த 7-ந் தேதி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், மத்திய அரசே, புதுச்சேரி மாநிலத்தில் 18 வயது கடந்தவர்களுக்கு தடுப்பூசியை இலவசமாக வழங்கும். நவம்பர் மாதம் வரை இலவச உணவுப் பொருட்கள் வழங்கப்படும் என்று கூறியதற்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்தி அனைவரும் தடுப்பூசி போட்டு கொரோனாவை முழுவதுமாக விரட்டவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.