மாநில செய்திகள்

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல் + "||" + Moderate rain likely in one or two places in Tamil Nadu today - Meteorological Department

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்
வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை, 

தென்மேற்கு பருவமழை கேரளாவில் கடந்த 3-ந்தேதி தொடங்கியது. தமிழகத்தின் பகுதிகளிலும் அந்த பருவமழை முன்னேறி இருக்கிறது. இதன் காரணமாகவும், வெப்பசலனம் காரணமாகவும் தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக ஆங்காங்கே மழை பெய்து கொண்டு வருகிறது.

அதன் தொடர்ச்சியாக வெப்பசலனத்தால் தமிழகத்தில் கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டியுள்ள உள் மாவட்டங்கள், கன்னியாகுமரி மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்கள் மற்றும் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் இன்று (வியாழக்கிழமை), லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

சென்னையை பொறுத்தவரையில், இன்று வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் 25 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு மிகப்பெரிய அளவில் கட்டுக்குள் வந்துள்ளன - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழகத்தில் 25 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு மிகப்பெரிய அளவில் கட்டுக்குள் வந்துள்ளன என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
2. தமிழகத்தில் 34 மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி கையிருப்பில் இல்லை: ராதாகிருஷ்ணன்
தமிழகத்தில் 34 மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி கையிருப்பில் இல்லை என்று மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
3. தமிழகத்தில் அதிகரிக்கும் கருப்புபூஞ்சை நோய்: இதுவரை 847 பேருக்கு பாதிப்பு
கருப்பு பூஞ்சை நோயால் தமிழகத்தில் இதுவரை 847 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
4. தமிழகத்தில் 8 மாவட்டகளில் கன மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் 8 மாவட்டகளில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
5. 26 காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் - தமிழக அரசு உத்தரவு
மேலும் 9 ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட 26 காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.