தேசிய செய்திகள்

மும்பையில் குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து- 9 பேர் உயிரிழப்பு + "||" + Nine killed, 8 injured as residential structure collapses in Mumbai's Malad West

மும்பையில் குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து- 9 பேர் உயிரிழப்பு

மும்பையில் குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து- 9 பேர் உயிரிழப்பு
மும்பையில் கனமழை கொட்டி தீர்த்த நிலையில் குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்தது.
மும்பை,

மராட்டிய மாநிலம் மும்பையின்  மேற்கு பகுதியில் குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இரண்டு மாடிகள் கொண்ட கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 9- பேர் உயிரிழந்தனர். 8 பேர் காயம் அடைந்தனர்.  

கட்டிட இடிபாடுகளுக்கும் மேலும் சிலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மீட்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.  காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நிகழ்விடத்திற்கு நேரில் வந்து ஆய்வு செய்த மராட்டிய மந்திரி அஸ்லாம் ஷைக், மும்பையில் பெய்த கனமழை காரணமாக கட்டிடம் இடிந்து விழுந்துள்ளதாகவும் மீட்பு பணிகள் தொய்வின்றி நடப்பதாகவும் குறிப்பிட்டார். 

தொடர்புடைய செய்திகள்

1. மும்பை சுற்றுப்புற மாவட்டங்களை வெள்ளம் சூழ்ந்தது; ரெயில்கள் நிறுத்தப்பட்டதால் பயணிகள் பரிதவிப்பு
தொடர் மழையால் ஆறுகள் கரைபுரண்டு ஓடுவதால் மும்பை சுற்றுப்புற மாவட்டங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால் சுமார் 6 ஆயிரம் பயணிகள் நடுவழியில் சிக்கி தவிக்கின்றனர்.
2. மும்பையில் கடற்படை தளத்தை சுற்றி ட்ரோன் பறக்கவிட தடை
மும்பையில் கடற்படை தளத்தை சுற்றி 3 கி.மீ.க்கு ட்ரோன்களை பறக்கவிட தடை விதிக்கப்பட்டுள்ளது.
3. மும்பையில் பலத்த மழை: ரெயில் சேவை பாதிப்பு
மும்பை, தானே மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் 2-வது நாளாக பலத்த மழை பெய்தது.
4. கொட்டித்தீர்த்த கனமழை; மும்பைக்கு குடிநீர் வழங்கும் விகார் ஏரி நிரம்பியது
தொடச்சியாக பெய்த கனமழையால் மும்பைக்கு குடிநீர் வழங்கும் விகார் ஏரி நிரம்பியது.
5. கனமழையால் துயரம்; மும்பையில் வீடுகள் இடிந்து 33 பேர் பலி-ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்
மும்பையில் இடைவிடாமல் கொட்டித்தீர்த்த கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டதில், வீடுகள் இடிந்து 33 பேர் பலியானார்கள்.