தேசிய செய்திகள்

பிரதமர் மோடி- உத்தவ் தாக்கரே தனிப்பட்ட சந்திப்பு ஏன்? - சிவசேனா விளக்கம் + "||" + Why Modi-Udhdhav Thackeray private meeting? - Shiv Sena explanation

பிரதமர் மோடி- உத்தவ் தாக்கரே தனிப்பட்ட சந்திப்பு ஏன்? - சிவசேனா விளக்கம்

பிரதமர் மோடி- உத்தவ் தாக்கரே தனிப்பட்ட சந்திப்பு ஏன்? - சிவசேனா விளக்கம்
பிரதமர் நரேந்திர மோடி, முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தனிப்பட்ட சந்திப்பு ஏன் என்பதற்கு சிவசேனா விளக்கம் அளித்துள்ளது.
மும்பை, 

நேற்று முன்தினம் டெல்லிக்கு பயணம் மேற்கொண்ட முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தனது மந்திரி சபை சகாக்களான துணை முதல்-மந்திரி அஜித்பவார் (தேசியவாத காங்கிரஸ்), மந்திரி அசோக் சவான்(காங்கிரஸ்) ஆகியோருடன் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார்.

மேலும் மோடி, உத்தவ் தாக்கரே இருவரும் தனியாகவும் சந்தித்து பேசினர். இந்த தனிப்பட்ட சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனால் மராட்டிய கூட்டணி ஆட்சிக்கு ஆபத்து இல்லை என்றும் கூட்டணி தலைவர்கள் கூறினர்.

இதுகுறித்து பதில் அளித்த முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே இந்த சந்திப்பில் தவறு ஒன்றும் இல்லை. நான் ஒன்றும் பாகிஸ்தான் தலைவர் நவாஸ் ஷெரீப்பை சந்திக்கவில்லை என தெரிவித்தார்.

இதுகுறித்து சிவசேனாவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவின் தலையங்கத்தில் நேற்று கூறியிருப்பதாவது:-

முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவின் பயணம் தனிப்பட்ட அரசியல் காரணங்களுக்காக இல்லை. இதில் அரசியல் பார்ப்பவர்கள், அந்த சிந்தனையிலேயே மகிழ்ச்சியாக இருக்கட்டும். இந்த சந்திப்பு குறித்து நிறைய யூகங்கள் இருக்கும்.

ஆனால் மத்திய அரசுடன் சார்ந்த மராட்டிய பிரச்சினைகள் விரைவில் தீர்க்கப்படும் என்ற ஒற்றை நம்பிக்கை மட்டுமே எங்களிடம் உள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவின் உறவின் தன்மையை புரிந்துகொள்ள முயற்சிக்கவேண்டும். மாநிலத்திற்கான மத்திய அரசின் பங்கை சிவசேனா நிச்சயம் கேட்டு பெறும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. டிசம்பர் மாதத்துக்குள் 200 கோடி தடுப்பூசி உற்பத்தி: ஜே.பி.நட்டா
டிசம்பர் மாதத்துக்குள் இந்தியாவிடம் 200 கோடி தடுப்பூசி இருக்கும் என்று ஜே.பி.நட்டா கூறினார். நிலம், நீர், ஆகாய மார்க்கமாக மோடி ஆக்சிஜன் கொண்டு வந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
2. பீட்சா, பர்கரை வீடு தேடிச்சென்று அளிக்கும்போது ரேஷன் பொருட்களை வீட்டிலேயே கொடுக்கக்கூடாதா? மோடிக்கு அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி
பீட்சா, பர்கரை வீடு தேடிச்சென்று அளிக்கும்போது, ரேஷன் பொருட்களை வீட்டுக்கே சென்று கொடுக்கக்கூடாதா என்று மோடிக்கு அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி விடுத்துள்ளார்.
3. மில்கா சிங் மீண்டும் ஆஸ்பத்திரியில் அனுமதி பிரதமர் மோடி நலம் விசாரித்தார்
மில்கா சிங் மீண்டும் ஆஸ்பத்திரியில் அனுமதி பிரதமர் மோடி நலம் விசாரித்தார்.
4. மோடி பதவியேற்ற மே 26 ஆம் நாளை தேசிய கறுப்பு தினமாக கடைபிடிப்போம் - தொல்.திருமாவளவன்
மோடி பதவியேற்ற மே 26 ஆம் நாளை தேசிய கறுப்பு தினமாக கடைபிடிப்போம் என்று தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
5. கொரோனாவின் மோசமான பிடியில் சிக்கிய 100 மாவட்ட கலெக்டர்களுடன் மோடி பேசுகிறார்
கொரோனாவின் மோசமான பிடியில் சிக்கியுள்ள 100 மாவட்ட கலெக்டர்களுடன் பிரதமர் மோடி பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.