தேசிய செய்திகள்

மும்பையில் குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து - பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு + "||" + 11 people have been reported dead so far Residential structures collapsed in Mumbai

மும்பையில் குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து - பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு

மும்பையில் குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து - பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
மும்பையில் குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.
மும்பை,

மராட்டிய மாநிலத்தில் நேற்று முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று முதல் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது.

இந்நிலையில், கனமழை காரணமாக மும்பையின் மாலட் மேற்கு பகுதியில் குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இரண்டு மாடிகள் கொண்ட கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் முதல்கட்டமாக 9 பேர் உயிரிழந்தனர். தற்போது கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்த மேலும் 2 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

இதனால், குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது. மேலும், காயங்களுடன் மீட்கப்பட்ட 8 பேர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கட்டிட இடிபாடுகளுக்கும் மேலும் சிலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதனால், மீட்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. நிகழ்விடத்திற்கு நேரில் வந்து ஆய்வு செய்த மராட்டிய மந்திரி அஸ்லாம் ஷைக், மும்பையில் பெய்த கனமழை காரணமாக கட்டிடம் இடிந்து விழுந்துள்ளதாகவும் மீட்பு பணிகள் தொய்வின்றி நடப்பதாகவும் குறிப்பிட்டார். 

தொடர்புடைய செய்திகள்

1. மும்பை சாலைகளில் தேங்கிய மழை வெள்ளத்தால் போக்குவரத்து கடும் பாதிப்பு
மும்பையில் பிரதான சாலைகளில் தேங்கிய மழை வெள்ளம் காரணமாக வாகன ஓட்டிகள் பரிதவிப்புக்கு ஆளாகினர்.
2. மும்பையில் குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து- 9 பேர் உயிரிழப்பு
மும்பையில் கனமழை கொட்டி தீர்த்த நிலையில் குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்தது.
3. மும்பை, கொங்கன் பகுதியில் மேலும் 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
மும்பை உள்ளிட்ட கொங்கன் பகுதியில் மேலும் 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.
4. மும்பையில் இன்று முதல் மீண்டும் செயல்பட தொடங்கிய பேருந்து சேவைகள்
மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் அரசு அறிவித்த புதிய தளர்வுகள் இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
5. கொரோனா குறைந்து வரும் அளவின் அடிப்படையில் நடவடிக்கை; மாவட்டங்களை 5 வகையாக பிரித்து மராட்டியத்தில் புதிய தளர்வுகள்; மும்பையில் பூங்கா, சலூன் திறக்க அனுமதி
மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு புதிய தளர்வுகளை அறிவிக்க அரசு முடிவு செய்தது.