உலக செய்திகள்

அமெரிக்காவில் டிக்டாக் உள்ளிட்ட 8 சமூக வலைதளங்கள் தடையை திரும்ப பெற்றார் ஜோ பைடன் + "||" + Joe Biden withdraws ban on 8 social networking sites in the US

அமெரிக்காவில் டிக்டாக் உள்ளிட்ட 8 சமூக வலைதளங்கள் தடையை திரும்ப பெற்றார் ஜோ பைடன்

அமெரிக்காவில் டிக்டாக் உள்ளிட்ட 8 சமூக வலைதளங்கள் தடையை திரும்ப பெற்றார் ஜோ பைடன்
அமெரிக்காவில் டிக்டாக், விசாட் உள்ளிட்ட 8 சமூக வலைதளங்களை தடை செய்வதற்கான ஆணையை அதிபர் ஜோ பைடன் திரும்ப பெற்றுள்ளார்.
வாஷிங்டன்,

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், கடந்த ஆண்டு பாதுகாப்பு காரணங்களுக்காக டிக்டாக், விசாட் உள்ளிட்ட 8 சமூக வலைதளங்களை அமெரிக்காவில் தடை செய்வதற்கான நிர்வாக உத்தரவுகளை பிறப்பித்தார். இதை எதிர்த்து சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்குகள் தொடர்பான விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் அமெரிக்காவின் தற்போதைய அதிபர் ஜோ பைடன், பதவியேற்றது முதல் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக செயல்படுத்தி வருகிறார். இதற்கிடையில் நிர்வாக ரீதியாக பல்வேறு மாற்றங்களையும் அவர் செய்துள்ளார். அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை தொடர்பாக அவர் செய்துள்ள மாற்றங்கள் குறிப்பிடத்தகுந்தவை ஆகும்.

அந்த வகையில் முன்னாள் அதிபர் டிரம்ப் பிறப்பித்திருந்த டிக்டாக், விசாட் உள்ளிட்ட 8 சமூக வலைதளங்களை தடை செய்வதற்கான ஆணையை அதிபர் ஜோ பைடன் திரும்ப பெற்றுள்ளார். மேலும் டிக்டாக் உள்ளிட்ட செயலிகள் அமெரிக்க பயனாளர்களின் தகவல்களை திருடுவதாக முந்தைய அரசு குற்றம் சாட்டியிருந்த நிலையில், இந்த செயலிகளுக்கான புதிய விதிகளை உருவாக்க விரிவான கட்டமைப்பு ஏற்படுத்தப்படும் என்று அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. 60 நாடுகளுக்கு, 11 கோடி கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது: அமெரிக்கா தகவல்
11 கோடி கொரோனா தடுப்பூசிகளை, 60 நாடுகளுக்கு நன்கொடையாக வழங்கி உள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
2. அமெரிக்காவில் 34.7 கோடி தடுப்பூசி டோஸ்கள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக தகவல்
அமெரிக்காவில் இதுவரை 34.7 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
3. அமெரிக்காவின் பென்டகன் அருகே துப்பாக்கிச்சூடு நடைபெற்றதாக தகவல்
துப்பாக்கிச்சூடு நடைபெற்றதையடுத்து பென்டகன் பகுதியில் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
4. அமெரிக்காவில் லட்சக்கணக்கான மக்கள் வீடற்றவர்களாகும் அபாயம்; காரணம் என்ன?
சீனாவில் தோன்றிய உயிர்கொல்லி கொரோனா வைரஸ் ஓராண்டுக்கும் மேலாக உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. உலக நாடுகள் பலவும் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் அதேவேளையில் பொருளாதார ரீதியாக ஏற்பட்ட பாதிப்பை குறைக்கும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளன.
5. அமெரிக்காவில் புளோரிடா மாகாணம் கொரோனாவால் மோசமாக பாதிப்பு
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவல் மீண்டும் வேகம் எடுக்கிறது. புளோரிடா மாகாணம், மோசமான பாதிப்புக்குள்ளாகி உள்ளது.