கிரிக்கெட்

சர்வதேச டெஸ்ட் வீரர்கள் தரிவரிசையில் இந்திய கேப்டன் விராட் கோலி தொடர்ந்து 5-வது இடம் + "||" + ICC Test Rankings: Virat Kohli, Rishabh Pant, Rohit Sharma hold onto their spots within top 10

சர்வதேச டெஸ்ட் வீரர்கள் தரிவரிசையில் இந்திய கேப்டன் விராட் கோலி தொடர்ந்து 5-வது இடம்

சர்வதேச டெஸ்ட் வீரர்கள் தரிவரிசையில் இந்திய கேப்டன் விராட் கோலி தொடர்ந்து 5-வது இடம்
சர்வதேச டெஸ்ட் வீரர்கள் தரிவரிசையில் இந்திய கேப்டன் விராட் கோலி தொடர்ந்து 5-வது இடத்தில் நீடிக்கிறார்.
துபாய்

டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டு உள்ளது. பேட்ஸ்மேன்களில் இந்திய கேப்டன் விராட் கோலி 5- வது இடத்திலும்(, ரிஷப் பண்ட் மற்றும் ரோகித் சர்மா( 747 புள்ளிகள்) கூட்டாக இணைந்து 6-வது இடத்தில் நீடிக்கின்றனர்.

ஜூன் 18 முதல் நியூசிலாந்திற்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் கோலி இந்தியாவை வழிநடத்துவார். ஒரு இடத்தைப் பெற்ற பந்த் மற்றும் ரோகித் தலா மதிப்பீட்டு புள்ளிகளைப் பெற்றுள்ளனர்.

பந்துவீச்சாளர் தரவரிசையில் தமிழக வீரர் அஸ்வின் மட்டும் 2-வது இடத்தில் நீடித்து டாப் 10 வரிசையில் இருக்கும் ஒரே இந்திய வீரர் ஆவார்.

அதேபோல் ஆல்-ரவுண்டர் தரிவரிசையில் இந்திய வீரர்கள் ரவீந்திர ஜடேஜா 2-வது இடத்திலும், ரவிச்சந்திரன் அஸ்வின் 4-வது இடத்திலும் தொடர்ந்து நீடிக்கின்றனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கிரிக்கெட் உலகம் இயல்பு நிலைக்கு திரும்பாததால் தரவரிசையில் தொய்வு ஏற்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

347 பந்துகளில் 200 ரன்கள் எடுத்த நியூசிலாந்தின்  டெஸ்ட் அறிமுக வீரர் டெவன் கான்வே டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் 447 புள்ளிகளுடன் 77 வது இடத்தில் நுழைந்துள்ளார். நியூசிலாந்தின் கேப்டன் கேன் வில்லியம்சன் 895 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.

ஐ.சி.சி டெஸ்ட் பேட்டிங் தரவரிசை (ஜூன் 9, 2021 வரை)

1. கேன் வில்லியம்சன்
2. ஸ்டீவ் ஸ்மித்
3. மார்னஸ் லாபுசாக்னே
4. ஜோ ரூட்
5. விராட் கோலி
6. ரிஷப் பண்த்
7. ரோகித் சர்மா
8. ஹென்றி நிக்கோலஸ்
9. டேவிட் வார்னர்
10. பாபர் ஆசாம்

ஐ.சி.சி டெஸ்ட் பந்துவீச்சு தரவரிசை

1. பாட் கம்மின்ஸ்
2. ரவிச்சந்திரன் அஸ்வின்
3. டிம் சவுதி
4. ஜோஷ் ஹேசில்வுட்
5. நீல் வாக்னர்
6. ஜேம்ஸ் ஆண்டர்சன்
7. ஸ்டூவர்ட் பிராட்
8. ஜேசன் ஹோல்டர்
9. காகிசோ ரபாடா
10. மிட்செல் ஸ்டார்க்

ஐ.சி.சி டெஸ்ட் ஆல்-ரவுண்டர் தரவரிசை

1. ஜேசன் ஹோல்டர்
2. ரவீந்திர ஜடேஜா
3. பென் ஸ்டோக்ஸ்
4. ரவிச்சந்திரன் அஸ்வின்
5. ஷாகிப் அல் ஹசன்