மாநில செய்திகள்

தமிழகத்திற்கு மேலும் 85 ஆயிரம் டோஸ் கோவாக்சின் தடுப்பு மருந்துகள் வருகை + "||" + Another 85,000 doses of covaxin have arrived in Tamil Nadu

தமிழகத்திற்கு மேலும் 85 ஆயிரம் டோஸ் கோவாக்சின் தடுப்பு மருந்துகள் வருகை

தமிழகத்திற்கு மேலும் 85 ஆயிரம் டோஸ் கோவாக்சின் தடுப்பு மருந்துகள் வருகை
தமிழகத்துக்கு 85 ஆயிரம் கோவாக்சின் தடுப்பூசிகள் விமானம் மூலம் கொண்டு வரப்பட்டுள்ளன.
சென்னை,

கொரோனா நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் தமிழகத்திலும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இருப்பினும் பல்வேறு தடுப்பூசி மையங்களில் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், 36 மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. சென்னையில் 1,060 டோஸ் தடுப்பூசி மட்டுமே கையிருப்பில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து தமிழகத்திற்கு அதிக அளவில் தடுப்பூசிகளை அனுப்ப வேண்டும் என மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை வைத்திருந்தது. இந்த கோரிக்கையை ஏற்று மத்திய அரசு, மத்திய தொகுப்பில் இருந்து தமிழகத்திற்கு தடுப்பூசிகளை அனுப்பி வருகிறது.

அந்த வகையில் தமிழகத்திற்கு இன்று 85 ஆயிரம் கோவாக்சின் தடுப்பூசிகள் ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனத்திடம் இருந்து விமானம் மூலம் சென்னை வந்துள்ளது. இவை மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பட உள்ளதால், பல்வேறு மையங்களில் நிறுத்தப்பட்டிருந்த தடுப்பூசி செலுத்தும் பணி நாளை தொடங்கலாம் என தகவல் வெளியாக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்திற்கு இதுவரை 2.15 கோடி தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல்
தமிழகத்திற்கு இதுவரை 2.15 கோடி தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய இணையமைச்சர் பாரதி ப்ரவீன் தெரிவித்துள்ளார்.
2. 44 கோடி கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய மத்திய அரசு உத்தரவு
44 கோடி கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
3. தமிழகத்திற்கு நாளை முதல் கூடுதல் தடுப்பூசிகள் வருகை - சுகாதாரத்துறை அறிவிப்பு
தமிழகத்திற்கு ஜூன் மாத இறுதிக்குள் 42.58 தடுப்பூசிகள் வர உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.