உலக செய்திகள்

பயணிகளை ஏற்றிகொண்டிருந்த பஸ் மீது 5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து - 9 பேர் பலி + "||" + Nine dead after bus crushed in South Korea building collapse

பயணிகளை ஏற்றிகொண்டிருந்த பஸ் மீது 5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து - 9 பேர் பலி

பயணிகளை ஏற்றிகொண்டிருந்த பஸ் மீது 5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து - 9 பேர் பலி
தென்கொரியாவில் சாலையில் பயணிகளை ஏற்றிக்கொண்டிருந்த பஸ் பேருந்து மீது 5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 9 பேர் உயிரிழந்தனர்.
சியோல்,

தென்கொரியாவின் தென்கிழக்கு பகுதியில் உள்ள குவான்ஜூ நகரில் உள்ள ஒரு சாலையில் பஸ் நிலையம் ஒன்று அமைந்துள்ளது. அங்கு நேற்று மாலை அவ்வழியாக வந்த பஸ் அங்கு நின்றுகொண்டிருந்த பயணிகளை ஏற்றிக்கொண்டிருந்தது.

அப்போது, அந்த பஸ் நிலையம் அருகே பாதி இடிக்கப்பட்ட நிலையில் இருந்த 5 மாடி கட்டிடம் திடீரென முழுமையாக இடிந்து விழுந்தது. அந்த 5 கட்டிடம் பயணிகளை ஏற்றிக்கொண்டிருந்த பஸ் மீது விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பஸ்சில் இருந்தவர்கள் மற்றும் பஸ் நிலையத்தில் நின்றுகொண்டிருந்தவர்கள் என 15-க்கும் மேற்பட்டோர் சிக்கிக்கொண்டனர். 

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் பஸ்சில் இருந்தவர்கள் உள்பட இடிபாடுகளுக்குள் சிக்கிய 8 பேரை படுகாயங்களுடன் மீட்டனர். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டுள்ளனர். ஆனாலும், இந்த கட்டிட விபத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கி பஸ்சில் இருந்தவர்கள் உள்பட 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

வேறு கட்டிடம் கட்டுவதற்காக அந்த 5 மாடி கட்டிடம் இடிக்கும் பணிகள் நடைபெற்றுள்ளது. 5 மாடி கட்டிடம் பாதி இடிக்கப்பட்ட நிலையில் பலவீனமாக இருந்துள்ளதாகவும், அதனால் கட்டிடம் இடிந்து விழுந்துள்ளதாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், இந்த விபத்து குறித்து முழுமையான விசாரணை நடத்த அதிகாரிகளுக்கு தென்கொரிய அதிபர் மூன் லீ உத்தரவிட்டுள்ளார்.தொடர்புடைய செய்திகள்

1. தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் ஜூலை முதல் மாஸ்க் அணிய தேவையில்லை: தென்கொரியா
தென்கொரியாவில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் ஜூலை முதல் மாஸ்க் அணிய தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.