மாநில செய்திகள்

14 ந்தேதி கூட்டம் : எம்.எல்.ஏ.க்கள் தவிர்த்து வேறு யாரையும் அனுமதிக்க இயலாது- அ.தி.மு.க அறிவிப்பு + "||" + Meeting on the 14th: Excluding MLAs No one else can be allowed ADMK announcement

14 ந்தேதி கூட்டம் : எம்.எல்.ஏ.க்கள் தவிர்த்து வேறு யாரையும் அனுமதிக்க இயலாது- அ.தி.மு.க அறிவிப்பு

14 ந்தேதி கூட்டம் : எம்.எல்.ஏ.க்கள் தவிர்த்து வேறு யாரையும் அனுமதிக்க இயலாது- அ.தி.மு.க அறிவிப்பு
14 ந்தேதி கூட்டத்தில் கொரோனா காரணமாக தலைமை அலுவலகத்தில் எம்.எல்.ஏ.க்கள் தவிர்த்து வேறு யாரையும் அனுமதிக்க இயலாது என் அறிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னை

அதிமுக எம்எல்ஏ-க்கள் ஆலோசனைக் கூட்டம் ஜூன் 14-ம் தேதி நண்பகல் 12 மணிக்கு ராயப்பேட்டையிலுள்ள தலைமை அலுவலகத்தில் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோர் தலைமையில் நடைபெறவுள்ளது.

எம்எல்ஏ-க்கள் அனைவரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக அரசு அறிவித்திருக்கும் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றியும் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தும், முகக் கவசம் அணிந்தும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும்.

கொரோனா காரணமாக தலைமை அலுவலகத்தில் எம்.எல்.ஏ.க்கள் தவிர்த்து வேறு யாரையும் அனுமதிக்க இயலாது.

தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டம் ஜூன் 21-ம் தேதி கூடவுள்ள நிலையில்,எதிர்க்கட்சித் துணைத் தலைவர், கொறடா போன்றோர் இந்தக் கூட்டத்தில் தேர்வு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. புதுச்சேரியில் போட்டியிட்ட 5 தொகுதிகளிலும் அ.தி.மு.க. படுதோல்வி
புதுச்சேரியில் போட்டியிட்ட 5 தொகுதிகளிலும் அ.தி.மு.க. தோல்வியை தழுவியது. ஒரு இடம் கூட கிடைக்காததால் கட்சியினர் அதிர்ச்சி அடைந்தனர்.
2. சொந்த ஊரான சிலுவம்பாளையத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரிசையில் நின்று வாக்களித்தார்
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது சொந்த ஊரான சிலுவம்பாளையத்தில் வரிசையில் நின்று வாக்களித்தார்.
3. அ.தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,500 வழங்கும் திட்டத்துக்கு முதல் கையெழுத்து இடப்படும்
அ.தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,500 வழங்கும் திட்டத்துக்கு முதல் கையெழுத்து இடப்படும் என்று அ.தி.மு.க. வேட்பாளர் தளவாய் சுந்தரம் பிரசாரம் செய்தார்.
4. தேர்தலில் சரியான தீர்ப்பை மக்கள் எங்களுக்கு வழங்குவார்கள்; எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை
தே.மு.தி.க.வினர் பக்குவம் இல்லாதவர்கள் என்றும், தேர்தலில் சரியான தீர்ப்பை மக்கள் தங்களுக்கு வழங்குவார்கள் என்றும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
5. கோவை மாவட்டத்தில் 7 தொகுதிகளில் அ.தி.மு.க தி.மு.க. வேட்பாளர்கள் நேரடி மோதல்
கோவை மாவட்டத்தில் மொத்தம் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் 7 தொகுதிகளில் அ.தி.மு.க-தி.மு.க. வேட்பாளர்கள் நேரடியாக மோதுகின்றனர்.