மாநில செய்திகள்

ஓ.பன்னீர் செல்வம் - எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் இடையே போஸ்டர் யுத்தம் + "||" + Poster war between O. Panneer Selvam - Edappadi Palanisamy supporters

ஓ.பன்னீர் செல்வம் - எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் இடையே போஸ்டர் யுத்தம்

ஓ.பன்னீர் செல்வம் - எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் இடையே போஸ்டர் யுத்தம்
நெல்லையில் ஓ. பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் இடையே போஸ்டர் யுத்தம் தொடங்கி உள்ளது.
சென்னை 

அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்தைக் கலந்தாலோசிக்காமல் எடுத்த முடிவால் தான் தேர்தலில் தோல்வியடைந்ததாகக் கூறித் திருநெல்வேலியில் அக்கட்சி தொண்டர்கள் பெயரில் நேற்று  பல இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்தது.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்தைக் கலந்தாலோசிக்காமல் எடுத்த முடிவால் தான் தேர்தலில் தோல்வியடைந்ததாகக் கூறித் திருநெல்வேலியில் அக்கட்சி தொண்டர்கள் பெயரில் பல இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

அதிமுக மானூர் பகுதி தொண்டர்கள் என்கிற பெயரில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளில் ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் படங்களுடன்“அதிமுக கட்சி செயல்பாடுகளில் மாண்புமிகு அம்மா அவர்களால் அடையாளம் காட்டப்பட்ட தலைமை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களிடம் கலந்து ஆலோசிக்காமல் எந்த விதமான செயல்பாடுகளோ, நடவடிக்கைகளோ செய்யாதே. அவ்வாறு செய்ததால் தான் தேர்தலில் தோற்றுப்போனோம். இனிமேலும் தொடர்ந்தால் தலைமைக் கழகத்தை முற்றுகையிடுவோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எடப்பாடி பழனிசாமிக்கு  எதிராக தொண்டர்கள் பெயரில் போஸ்டர்கள் ஒட்டிய நிலையில் இன்று எடப்பாடிக்கு  ஆதரவாக போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதிமுக பொறுப்பாளர்கள் என்ற பெயரில் எடப்பாடிக்கு  ஆதரவாக ஓ.பன்னீர் செல்வம்  போட்டோவுடன் நெல்லையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. எதிர்கட்சி தலைவராக எடப்பாடியை பழனிசாமியை  தேர்வு செய்த எம்.எல்.ஏகளுக்கு நன்றி என குறிப்பிடப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. ஹலோ.. நான் சசிகலா பேசிறேன் ...! ஆடியோ தொண்டர்களை குழப்ப சசிகலா முயற்சி- கே.பி.முனுசாமி குற்றச்சாட்டு
ஜெயலலிதா ஆன்மா சாந்தியடைய சசிகலா குடும்பம் அ.தி.மு.க.வில் இருந்து விலகி இருக்க வேண்டும் என அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி.முனுசாமி கூறி உள்ளார்.
2. அ.தி.மு.க.வில் எதிர்க்கட்சி தலைவர் யார்? - இன்று நடைபெறும் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் முடிவு
அ.தி.மு.க.வில் எதிர்க்கட்சி தலைவர் யார்? என்பதை இன்று (7-ந் தேதி) நடைபெறும் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் முடிவு செய்கிறார்கள்.
3. ராஜபாளையம் அருகே திமுக ஒன்றிய கவுன்சிலர் வெட்டிக் கொலை
ராஜபாளையம் அருகே திமுக ஒன்றிய கவுன்சிலர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
4. கபசுர குடிநீர், முககவசம், கிருமிநாசினி வழங்க வேண்டும்; அ.தி.மு.க. தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள்
அ.தி.மு.க. சார்பில் கபசுர குடிநீர், முககவசம், கிருமி நாசினி வழங்க வேண்டும். தண்ணீர் பந்தல்களை திறந்து மக்களின் தாகத்தையும் தணிக்க வேண்டும் என்று தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
5. அ.தி.மு.க.-அ.ம.மு.க.வினர் மோதல்
முதுகுளத்தூர் அருகே அ.தி.மு.க.-அ.ம.மு.க.வினர் மோதல் ஏற்பட்டது.