தேசிய செய்திகள்

கொரோனா தடுப்பூசி கையிருப்பு தரவுகளை பொதுத்தளத்தில் பகிரக்கூடாது - மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு + "||" + Centre Asks States Not to Share Data on Vaccine Stocks, Temperature of Vaccine Storage in Public

கொரோனா தடுப்பூசி கையிருப்பு தரவுகளை பொதுத்தளத்தில் பகிரக்கூடாது - மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு

கொரோனா தடுப்பூசி கையிருப்பு தரவுகளை பொதுத்தளத்தில் பகிரக்கூடாது - மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு
கொரோனா தடுப்பூசி கையிருப்பு தரவுகளை பொதுத்தளத்தில் பகிரக்கூடாது என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.
புதுடெல்லி,

மாநில அரசுகள் தங்களிடம் உள்ள அனைத்து தடுப்பூசிகளின் கையிருப்பு மற்றும் அவற்றின் விநியோகம் குறித்த தகவல்களை மத்திய அரசிடம் தெரிவிக்க வேண்டும். அதேபோல், ஐக்கிய நாடுகள் மேம்பாட்டு திட்டத்தின் உதவியுடன் இந்தியாவில் செயல்படும் மின்னணு தடுப்பூசி நுண்ணறிவு வலையமைப்பு (இவின் - eVIN) என்ற முறையும் தடுப்பூசி பற்றிய அப்டேட்களுக்கு பயன்படுகிறது.

2012 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இவின் இணையதள தடுப்பூசி நுண்ணறிவு வலைதள அமைப்பில் நாடு முதல் மாவட்டம் வரையில் அனைத்து மட்டத்திலும் உள்ள தடுப்பூசி கையிருப்பு, அவை சேமித்து வைக்கப்பட்டிருக்கும் தட்பவெப்பநிலை போன்ற தரவுகள் இடம்பெற்றுள்ளது. மத்திய அரசுக்கு சொந்தமான இவின் இணையதள பக்கத்தில் உள்ள அந்த தரவுகளை பொதுவெளியில் அனைவரும் பார்த்துக்கொள்ளலாம். 

கொரோனா தடுப்பூசி தொடர்பான தரவுகளும் இவின் இணையதள பக்கத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த தரவுகள் மாநில அரசுகளால் தினசரி அப்டேட் செய்யப்படுகின்றன.

இந்நிலையில், தடுப்பூசி கையிருப்பு தொடர்பான தரவுகளை பொதுவெளியில் வெளியிட வேண்டாம் என மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 

இது தொடர்பாக, மாநில, யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கடந்த 4-ம் தேதி எழுதியுள்ள கடிதத்தில், மின்னணு தடுப்பூசி நுண்ணறிவு வலையமைப்பில் கொரோனா தடுப்பூசி கையிருப்பு மற்றும் விநியோகத்தை மாநில, யூனியன் பிரதேச அரசுகள் தினசரி பதிவிட்டு வருகின்றன. 

மத்திய அரசுக்கு சொந்தமான இணையதளபக்கத்தில் பதிவிடப்படும் கொரோனா தடுப்பூசி கையிருப்பு, விநியோக தரவுகளை மாநில அரசுகள் மத்திய அரசின் ஒப்புதல் இன்றி வேறு எந்த அமைப்புடனோ, ஊடகத்திடமோ, இணையதளத்திலோ, பொதுவெளியிலோ வெளியிடக்கூடாது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

மாநில அரசுகள் சேமித்து வைத்துள்ள தடுப்பூசிகளின் தட்பவெப்பநிலை, கையிருப்பு அளவு உள்ளிட்ட தரவுகளை தனியார் அமைப்புகள்\நிறுவனங்கள் தெரிந்துகொள்ளக்கூடாது என்பதற்காக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. சீனாவில் இதுவரை 80 கோடி தடுப்பூசி டோஸ்கள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக தகவல்
சீனாவில் இதுவரை 80 கோடி தடுப்பூசி டோஸ்கள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2. பாரத் பயோடெக் நிறுவனத்திற்கு மத்திய தொழிற்பாதுகாப்பு படை பாதுகாப்பு - மத்திய அரசு முடிவு
ஐதராபாத்தில் உள்ள பாரத பயோடெக் நிறுவனத்திற்கு மத்திய தொழிற்பாதுகாப்பு படையினரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
3. சேலம் மாவட்டத்தில் மருந்து தட்டுப்பாடு: கொரோனா தடுப்பூசி போடாததால் பொதுமக்கள் ஏமாற்றம்
சேலம் மாவட்டத்தில் மருந்து தட்டுப்பாடு காரணமாக கொரோனா தடுப்பூசி போடாததால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
4. கொரோனா தடுப்பூசிக்கு பயந்து கிராமத்தை விட்டு வெளியேறிய மக்கள்...!
கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
5. நமது பேச்சை கேட்க பிரதமர் மோடி 4 மாதங்கள் எடுத்துக்கொண்டுள்ளார் - மம்தா பானர்ஜி பேச்சு
மாநில அரசுகளின் கோரிக்கையை கேட்க பிரதமர் மோடி 4 மாதங்கள் எடுத்துக்கொண்டுள்ளார் என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.