தேசிய செய்திகள்

வங்காளதேசம் வழியாக இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற சீனர்! + "||" + BSF apprehends Chinese national along India-Bangladesh border in Malda

வங்காளதேசம் வழியாக இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற சீனர்!

வங்காளதேசம் வழியாக இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற சீனர்!
வங்காளதேசத்தில் இருந்து மேற்குவங்காள எல்லைப்பகுதி வழியாக இந்தியாவுக்குள் நுழைய முயன்ற சீன நாட்டவரை எல்லைப்பாதுகாப்பு படையினர் பிடித்தனர்.
கொல்கத்தா,

மேற்குவங்காளத்தின் மால்டா மாவட்டத்தில் அமைந்துள்ள சர்வதேச எல்லைப்பகுதியில் பாதுகாப்பு படையினர் இன்று வழக்கமான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது, வங்காளதேசத்தில் இருந்து இந்திய எல்லைக்குள் ஒரு நபர் அத்துமீறி நுழைவதை எல்லைப்பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்தனர்.

துரிதமாக செயல்பட்ட எல்லைப்பாதுகாப்பு படையினர் வங்காளதேசத்தில் இருந்து இந்திய எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற அந்த நபரை அதிரடியாக பிடித்தனர். 

பிடிபட்ட நபரிடம் எல்லைப்பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் பிடிபட்ட நபர் சீன நாட்டை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.

சீன நாட்டவர் வங்காளதேசம் வழியாக இந்திய எல்லைக்குள் நுழைய முயன்றதற்கான காரணம் குறித்து அந்த நபரிடம் பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சீனாவை சேர்ந்தவர் வங்காளதேசத்தில் இருந்து இந்தியாவின் மேற்குவங்காளத்திற்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. மேற்குவங்காளம்: இரு தரப்பினர் இடையே பயங்கர மோதல் - நாட்டு வெடிகுண்டுகள் வீச்சு
மேற்குவங்காளத்தில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட பயங்கர மோதலில் நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டுள்ளது.
2. மேற்குவங்காளம்: பாஜக அலுவலகம் அருகே 51 நாட்டு வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு
மேற்குவங்காளத்தில் பாஜக அலுவலகம் அருகே 51 நாட்டு வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
3. மேற்குவங்காளம்: புயல் நிவாரண பொருட்களை திருடியதாக பாஜக தலைவர் மீது வழக்குப்பதிவு
நகராட்சியில் இருந்து புயல் நிவாரண பொருட்களை திருடியதாக திரிணாமுல் காங்கிரஸ் அளித்த புகாரில் பாஜக தலைவர் சுவேந்து அதிகாரி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
4. மே.வங்காள வன்முறை: விசாரணை குழு அமையுங்கள் - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு 2 ஆயிரம் பெண் வழக்கறிஞர்கள் கடிதம்
மேற்குவங்காள வன்முறை தொடர்பாக சிறப்பு விசாரணை குழு அமையுங்கள் என்று உச்சநீதிமன்ற நீதிபதிக்கு 2 ஆயிரத்து 93 பெண் வழக்கறிஞர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.
5. சிபிஐ கைது செய்த திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களுக்கு திடீர் மூச்சுத்திணறல் - மருத்துவமனையில் அனுமதி
நாரதா வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் 2 பேருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.