தேசிய செய்திகள்

யுபிஎஸ்சி நேர்முகத் தேர்வு ஆகஸ்ட் 2ஆம் தேதி தொடங்குகிறது + "||" + UPSC civil providers exams: UPSC to start interviews for civil providers examination from August 2

யுபிஎஸ்சி நேர்முகத் தேர்வு ஆகஸ்ட் 2ஆம் தேதி தொடங்குகிறது

யுபிஎஸ்சி நேர்முகத் தேர்வு ஆகஸ்ட் 2ஆம் தேதி தொடங்குகிறது
யுபிஎஸ்சி சிவில் சர்வீஸின் 2020க்கான நேர்முகத் தேர்வு வருகின்ற ஆகஸ்ட் 2ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி,

மத்திய அரசின் குடிமைப் பணிகளான ஐஏஎஸ், ஐஎஃப்எஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பணிகளுக்கான முதல் நிலைத்தேர்வு ஆண்டுதோறும் மே மாதம் நடக்கும். நாடு முழுவதும் 10 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் எழுதும் தேர்வில் தேர்வாகும் தேர்வர்கள் முதன்மைத் தேர்வு (mains) எழுத அனுமதிக்கப்படுவார்கள்.

இதில் தேர்ச்சி அடைபவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பால் இந்த ஆண்டு நடக்கவிருந்த முதல் நிலைத்தேர்வு தொடர்ந்து தள்ளி வைக்கப்பட்டது. கடந்த ஆண்டு முதன்மைத் தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்களுக்கான நேர்முகத் தேர்வும் நடக்கவில்லை.

இந்தநிலையில்,  கடந்தாண்டு ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்ட யுபிஎஸ்சி நேர்முகத் தேர்வு கொரோனா பரவல் காரணமாக தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், மீண்டும் ஆகஸ்ட் 2ஆம் தேதி முதல் தொடங்கப்படும் எனவும், இதற்கான அழைப்பு upsc.gov.in, upsconline.in ஆகிய இணையதளங்களில் விரைவில் பதிவேற்றப்படும் என யுபிஎஸ்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஜூன் 27ஆம் தேதி நடைபெறவிருந்த யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வுகள் அக்டோபர் 21க்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், நேர்முகத் தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.