உலக செய்திகள்

ரஷ்யாவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: புதிதாக 11,699 பேருக்கு தொற்று உறுதி + "||" + Russia's new COVID-19 cases hit fresh three-month high

ரஷ்யாவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: புதிதாக 11,699 பேருக்கு தொற்று உறுதி

ரஷ்யாவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: புதிதாக 11,699 பேருக்கு தொற்று உறுதி
ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 51.67 லட்சத்தைக் கடந்துள்ளது.
மாஸ்கோ,

உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன. 

இதுவரை உலக அளவில் 17.52 கோடிக்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 37.77 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் தற்போது ரஷ்யா 6-வது இடத்தில் உள்ளது.
 
இந்நிலையில் ரஷ்யாவில் கடந்த 3 மாதங்களில் இல்லாத அளவாக புதிதாக 11,699 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ரஷ்யாவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 51,67,949 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றுக்கு மேலும் 383 பேர் உயிரிழந்ததால், அங்கு பலியானோர் எண்ணிக்கை 1 லட்சத்து 25 ஆயிரத்து 278 ஆக உயர்ந்துள்ளது.

ரஷ்யாவில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து 47,71,995 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 2,70,676 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்காவில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரிப்பு; புளோரிடாவில் ஒரே நாளில் 22 ஆயிரம் பேருக்கு தொற்று
அமெரிக்காவில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. புளோரிடா மாகாணத்தில் ஒரே நாளில் 22 ஆயிரம் பேருக்கு புதிதாக கொரோனா உறுதியாகி உள்ளது.
2. ஈரானில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: புதிதாக 32,511 பேருக்கு தொற்று
ஈரான் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 32,511 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. மலேசியாவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: புதிதாக 17,786 பேருக்கு தொற்று
மலேசியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 17,786 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. கேரளாவில் இன்று 20,772-பேருக்கு கொரோனா தொற்று உறுதி
கேரளாவில் இன்று 20,772-பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. டோக்கியா நகரில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு; ஒரே நாளில் 3,300 பேர் பாதிப்பு
ஜப்பான் முழுவதும் 10743 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். டோக்கியோவில் ஒரே நாளில் 3,300 பேர் பாதிப்பு