தேசிய செய்திகள்

2019-20 ஆம் ஆண்டில் காங்கிரசை விட 5 மடங்கு அதிகமாக நன்கொடை பெற்ற பா.ஜ.க. + "||" + Report on corporate & individual donations: BJP got Rs 750 crore in 2019-20, over 5 times what Congress got

2019-20 ஆம் ஆண்டில் காங்கிரசை விட 5 மடங்கு அதிகமாக நன்கொடை பெற்ற பா.ஜ.க.

2019-20 ஆம் ஆண்டில் காங்கிரசை விட  5 மடங்கு அதிகமாக நன்கொடை பெற்ற பா.ஜ.க.
கடந்த 2019-20 ஆம் ஆண்டில் பா.ஜ.க. காங்கிரஸ் கட்சியை விட 5 மடங்கு அதிகமாக நன்கொடை பெற்றது தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்த அறிக்கையின் மூலம் தெரிய வந்துள்ளது.
புதுடெல்லி

நாட்டில் உள்ள பல்வேறு தேசிய கட்சிகளும், மாநில கட்சிகளும் தங்களது கட்சியை நடத்த நன்கொடை பெறுவது வழக்கம். இந்த நன்கொடைகளின் விவரங்கள் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்படுகின்றன.

அந்த வகையில் கடந்த 2019-20 ஆம் ஆண்டில் அரசியல் கட்சிகள் பெற்ற நன்கொடை விவரங்கள் வெளியாகியுள்ளன. தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்த அறிக்கையின் படி பா.ஜ.க.  ஒரே ஆண்டில் ரூ.750 கோடியை தனிநபர் மற்றும் நிறுவனங்களிடமிருந்து  நன்கொடையாகப் பெற்றுள்ளது. இது காங்கிரஸ் கட்சி பெற்ற நன்கொடையைக் காட்டிலும் 5 மடங்கு அதிகமாகும்.

இதே கால கட்டத்தில் காங்கிரஸ் கட்சி ரூ.139 கோடியை நன்கொடையாக பெற்றுள்ளது. அதேபோல் தேசியவாத காங்கிரஸ் கட்சி ரூ.59 கோடியையும், திரிணாமுல் காங்கிரஸ்  கட்சி ரூ.8 கோடியையும், சிபிஐ(எம்) ரூ.19.6 கோடியையும், சிபிஐ ரூ.1.9 கோடியையும் நன்கொடையாகப் பெற்றுள்ளன.

பில்டர் சுதாகர் ஷெட்டியுடன் தொடர்புடைய ரியல் எஸ்டேட் நிறுவனமான குல்மார்க் ரியல் எஸ்டேட்  நிறுவனத்திடமிருந்து பா.ஜ.க ரூ .20 கோடியை நன்கொடையாக 2019 அக்டோபரில் பெற்றது. அமலாக்க இயக்குநரகம் 2020 ஜனவரியில் ஷெட்டியின் குடியிருப்பு மற்றும் அலுவலகத்தில் சோதனை நடத்தியது.பா.ஜ.க.வின் நன்கொடையாளர்களில் குறைந்தது 14 கல்வி நிறுவனங்களும் உள்ளன.

டெல்லி மேவார் பல்கலைக்கழகம் (ரூ .2 கோடி), கிருஷ்ணா இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங் (ரூ .10 லட்சம்), ஜி.டி. கோயங்கா இன்டர்நேஷனல் பள்ளி, சூரத் (ரூ .2.5 லட்சம்), பதானியா பப்ளிக் பள்ளி, ரோஹ்தக் (ரூ .2.5 லட்சம்), லிட்டில் ஹார்ட்ஸ் கான்வென்ட் பள்ளி, பிவானி (ரூ. 21,000), மற்றும் ஆலன் கேரியர், கோட்டா (ரூ .25 லட்சம்).

கட்சியின் நன்கொடையாளர்களில் பல பா.ஜ.க. உறுப்பினர்கள், எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.அரியானா முதல்வர் மனோகர் லால் கட்டர் ரூ .5 லட்சம்,மாநிலங்களவை எம்.பி. ராஜீவ் சந்திரசேகர் ரூ .2 கோடி, அருணாச்சல பிரதேச முதல்வர் பெமா காண்டு ரூ .1.1 கோடி, கிர்ரான் கெர் ரூ .6.8 லட்சம். மணிப்பால் குளோபல் எஜுகேஷன் தலைவர் டி வி மோகன்தாஸ் பை ரூ .15 லட்சம் என நன்கொடை அளித்துள்ளனர்.

தேர்தல் பத்திரங்களிலிருந்து கட்சியின் வருமானம் இன்னும் தெரியவில்லை, ஏனெனில் அதன் வருடாந்திர தணிக்கை அறிக்கையை இன்னும் சமர்ப்பிக்கவில்லை. 2019-20 ஆம் ஆண்டிற்கான வருடாந்திர தணிக்கை அறிக்கைகளை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடுவை தேர்தல் ஆணையம் நீட்டித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. காங்கிரஸ் கட்சியை மிகப்பெரிய மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட வேண்டும் - காங்கிரஸ் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி
காங்கிரஸ் கட்சியை மிகப்பெரிய மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி கேட்டு கொண்டுள்ளார்
2. காங்கிரசில் இணைந்த 3 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள்
பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் 3 பேர், காங்கிரசில் தங்களை இணைத்துக்கொண்டனர்.
3. ஆட்சி பொறுப்பேற்று 7 ஆண்டு நிறைவு; மோடி அரசு மீது காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் தாக்கு
ஆட்சி பொறுப்பேற்று 7 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் மோடி ஆட்சியை காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கடுமையாக விமர்சித்து உள்ளன.
4. பெட்ரோல்-டீசல் விலை உயர்வு: மத்திய அரசு மீது காங்கிரஸ் விமர்சனம்
பெட்ரோல், டீசல் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து.
5. காங்கிரஸ் மட்டுமே மூன்றாவது பெரிய கட்சி: சீமானும், கமல்ஹாசனும் தோல்வி அடைந்தவர்கள் - கே.எஸ்.அழகிரி
காங்கிரஸ் மட்டுமே மூன்றாவது பெரிய கட்சி என்றும் சீமானும், கமல்ஹாசனும் தோல்வி அடைந்தவர்கள் என்றும் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.