உலக செய்திகள்

92 நாடுகளுக்கு 50 கோடி கொரோனா தடுப்பூசிகளை அனுப்பி வைக்க முடிவு - ஜோ பைடன் + "||" + US to donate 500M more COVID-19 vaccine doses; Biden to urge world leaders to join

92 நாடுகளுக்கு 50 கோடி கொரோனா தடுப்பூசிகளை அனுப்பி வைக்க முடிவு - ஜோ பைடன்

92 நாடுகளுக்கு 50 கோடி கொரோனா தடுப்பூசிகளை அனுப்பி வைக்க முடிவு - ஜோ பைடன்
92 நாடுகளுக்கு 50 கோடி கொரோனா தடுப்பூசிகளை அனுப்பி வைக்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் முடிவு செய்துள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
வாஷிங்டன்,

50 கோடி பைசர் தடுப்பூசிகளை வாங்கி 92 நாடுகளுக்கு வழங்குவது குறித்த அறிவிப்பை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெளியிட உள்ளார்.

இது குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

அமெரிக்கா 50 கோடி பைசர் தடுப்பூசிகளை வாங்கி அதை குறைந்த மற்றும் நடுத்தரத்துக்கும் குறைவான வருவாய் உள்ள நாடுகள் மற்றும் ஆப்பிரிக்க ஒன்றியம் என 92 நாடுகளுக்கு வழங்குவது குறித்த அறிவிப்பை அதிபர் பைடன் இன்று அறிவிக்க உள்ளார். இவை ஆகஸ்ட் 2021 முதல் விநியோகிக்கப்பட உள்ளன. 20 கோடி தடுப்பூசிகள் இந்தாண்டு இறுதிக்குள் விநியோகிக்கப்படும். மீதமுள்ள 30 கோடி தடுப்பூசிகள் 2022 முதல் பாதிக்குள் விநியோகிக்கப்படும்.

இந்தியா, நேபாளம், வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் இலங்கை உள்பட பல்வேறு ஆசிய நாடுகளுக்கு 70 லட்சம் தடுப்பூசிகளை அனுப்ப ஜோ பைடன் நிர்வாகம் ஏற்கெனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. ஆசிய அமெரிக்கர்கள் மீதான வன்முறையைத் தடுக்கும் மசோதா சட்டம் அமல் - ஜோ பைடன்
ஆசிய அமெரிக்கர்கள் மீதான வன்முறையைத் தடுக்கும் மசோதாவில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கையெழுத்திட்டதை அடுத்து அந்த மசோதா சட்டம் அமலுக்கு வந்துள்ளது.
2. ஜூலை மாதத்திற்குள் 70 % அமெரிக்கர்களுக்கு தடுப்பூசி போட இலக்கு - ஜோ பைடன்
ஜூலை மாதத்திற்குள் 70 சதவீதம் அமெரிக்கர்களு​க்கு தடுப்பூசி செலுத்த திட்டமிட்டுள்ளதாக, அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
3. ‘சீனாவுடன் போட்டி போடுகிறோம், மோதலை எதிர்பார்க்கவில்லை' - அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் ஜோ பைடன் பேச்சு
சீனாவுடன் போட்டி போடுகிறோம், மோதலை எதிர்பார்க்கவில்லை என்று சீன அதிபர் ஜின்பிங்கிடம் கூறியதாக அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் ஜோ பைடன் தெரிவித்தார்.
4. தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் - அமெரிக்க அதிபர் ஜோ பைடன் டுவீட்
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தமிழ், கேரளா, பெங்காலி, நேபாளி உள்ளிட்ட பல்வேறு தரப்பு மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
5. 90% பெரியவர்கள் தடுப்பூசி போட தகுதியுடையவர்கள் என்று அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறேன் - ஜோ பைடன்
90% பெரியவர்கள் தடுப்பூசி போட தகுதியுடையவர்கள் என்று அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறேன் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.