தேசிய செய்திகள்

முன்களப்பணியாளர்களுக்கு 2வது டோஸ் செலுத்துவதில் கவனம் : மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தல் + "||" + States advised to focus on 2nd dose coverage of healthcare workers& frontline workers

முன்களப்பணியாளர்களுக்கு 2வது டோஸ் செலுத்துவதில் கவனம் : மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தல்

முன்களப்பணியாளர்களுக்கு 2வது டோஸ் செலுத்துவதில் கவனம் : மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தல்
முன்களப் பணியாளர்களுக்கு 2வது டோஸ் koரோனா தடுப்பூசி செலுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராகேஷ் பூஷண் அறிவுறுத்தியுள்ளார்.
புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா பாதிப்பின் இரண்டாவது அலை மெல்ல மெல்ல கட்டுக்குள் வரத்தொடங்கியுள்ளது. அந்த வகையில் மூன்றாவது நாளாக இன்று கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்திற்கு கீழ் பதிவாகியுள்ளது.  அதன்படி,  இந்தியாவில் 94 ஆயிரத்து 52 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இந்தநிலையில், அனைத்து மாநில சுகாதாரத்துறை செயலாளர்களுடனும், மத்திய சுகாதாரத்துறை செயலாளர் இன்று காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார்.

இந்தக் கூட்டத்தில், மாநிலங்களில் தேசிய தடுப்பூசி கொள்கையை முறையாக பின்பற்றி தடுப்பூசி போடப்படுகிறதா என்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.

ஆலோனைக் கூட்டத்தில் பேசிய ராஜேஷ் பூஷண், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் முன்களப்பணியாளர்களுக்கு 2வது  டோஸ் தடுப்பூசி செலுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.